இரு நாட்களாக இருந்த மர்ம மோட்டார் சைக்கிள் பொலிசாரால் மீட்பு | தினகரன்

இரு நாட்களாக இருந்த மர்ம மோட்டார் சைக்கிள் பொலிசாரால் மீட்பு

 
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடா பிரதேசத்தில் வீதியில் அடையாளம் காணப்படாமல் இரண்டு நாட்களாக இருந்த மோட்டார் சைக்கிளொன்றை இன்று (15) காலை மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
 
நாவற்குடா, மாரியம்மன் கோவில் வீதியிலுள்ள மாரியம்மன் கோவிலுக்கு அருகாமையில் கடந்த இரண்டு தினங்களாக அடையாளம் காணப்படாமல் மோட்டார் சைக்கிள் ஒன்று இருப்பதாக காத்தான்குடி பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து, குறித்த இடத்திற்கு சென்ற காத்தான்குடி பொலிசார் குறித்த மோட்டார் சைக்கிளை மீட்டதுடன் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
 
EP UF 1259 எனும் இலக்கமுடைய ஸ்கூட்டர் வகையைச் சேர்ந்த இந்த மோட்டார் சைக்கிள் இரண்டு நாட்களாக குறித்த பிரதேசத்தில் இருந்ததாகவும் இது தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்றுவருவதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
 
(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் - எம்.எஸ். நூர்தீன்)
 

Add new comment

Or log in with...