உழவு இயந்திரத்துடன் ரயில் மோதி கோர விபத்து: இருவர் பலி | தினகரன்

உழவு இயந்திரத்துடன் ரயில் மோதி கோர விபத்து: இருவர் பலி

வவுனியா, புதூர் செல்லும் வீதியிலுள்ள புகையிரதக் கடவையில் பயணித்த உழவு இயந்திரத்துடன் புகையிரதம் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.

நேற்று (15) மதியம் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கொழும்பிலிருந்து புறப்பட்டு யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற புகையிரதம் பிற்பகல் 1.35 மணியளவில் உழவு இயந்திரத்துடன் மோதியது.பாதுகாப்பற்ற புகையிரப்பாதையை கடக்கும்போதே இந்த விபத்து ஏற்பட்டது.இதில் உழவு இயந்திரத்தின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் மரணமடைந்தனர்.

இதில் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் ரவீதரன் (வயது 20), ரவீந்திரன் கீர்த்தீபன் (21வயது) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா விசேட நிருபர் 


Add new comment

Or log in with...