டிடிவி தினகரனுக்கு மே 29- வரை பொலிஸ் காவல் நீடிப்பு | தினகரன்

டிடிவி தினகரனுக்கு மே 29- வரை பொலிஸ் காவல் நீடிப்பு

 

டிடிவி தினகரன் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் இருவருக்கும் மே 29-ம் திகதி வரை காவல் நீடிக்கப்பட்டு உள்ளது.

அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு இலஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது.

சுகேஷ் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து டிடிவி தினகரனையும், அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவையும் கடந்த 25-ம் திகதி டெல்லி குற்றப்பிரிவு பொலிசார் கைது செய்தனர்.

இருவரின் பொலிஸ் காவல் முடிந்த நிலையில் டிடிவி தினகரன், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் இருவரும் காணொலிக் காட்சி மூலம் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது இருவரது காவலையும் வரும் 29-ம் திகதி வரை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இருவரின் குரல் மாதிரியைப் பதிவு செய்யக் கோரும் மனு மே 18-ல் விசாரணைக்கு வருகிறது. குரல் மாதிரியைப் பதிவு செய்ய சுகேஷ் சந்திரசேகர் டெல்லி நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


Add new comment

Or log in with...