கம்பளை சிறுவன் கடத்தல்; மேலும் நால்வருக்கு விளக்கமறியல் | தினகரன்

கம்பளை சிறுவன் கடத்தல்; மேலும் நால்வருக்கு விளக்கமறியல்

 
நாட்டில் கடும் பரபரப்பை ஏற்படுத்திய கம்பளையைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுவன் கடத்தல் தொடர்பாக முன்னாள் ராசீக்குழு உறுப்பினர்கள் இருவர் உட்பட மேலும் நான்கு பேரை காத்தான்குடி பொலிசார் கைது செய்துள்ளனர்.
 
குறித்த கடத்தில் சம்பவத்தின்போது கம்பளையிலிருந்து சிறுவனைக் கடத்திவந்த காத்தான்குடியைச் சேர்ந்த வேனையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
 
 
கைது செய்யபபட்ட நபர்கள் நேற்று (08) மாலை மட்டக்களப்பு நீதவான் நீதிமனறத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, எதிர்வரும் 18 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியிலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராஜா உத்தரவிட்டார்.
 
கைதானவர்களில் இருவர் முன்னரும் பல குற்றச்செயல்களுடன் தொடர்புள்ளவர்கள் எனத்தெரியவருகிறது. 
 
 
அதன் அடிப்படையில், சிறுவன் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இதுவரை ஒரு பெண் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
கம்பளையில் கடத்தப்பட்ட சிறுவன் மட்டக்களப்பு கரடியானறு உறுகாமம் கிராமத்தில் வைத்து கடந்த சனிக்கிழமை (06) மீட்கப்பட்டார்.
 
கடந்த புதன்கிழமை (03) கம்பளை கங்கவட்ட வீதியைச் சேர்ந்த மூன்று வயதான   முஹம்மத் சல்மான் மற்றும் சிறுவனது உறவு முறையான முகம்மட் அசாம் என்பரும் காணாமல் போயிருந்தனர்.
 
பின்னர் காணாமல் போயிருந்த சிறுவனை அழைத்துச் சென்ற அசாம் (26) என்பவர் மீள திரும்பிய நிலையில் அவரை கைது செய்து அவரிடம் மேற் கொண்ட விசாரணையையடுத்து மட்டக்களப்பு கரடியனாறு கிராமத்தில் உள்ள வீடொன்றில் வைத்து சனிக்கிழமை (06) காலை சுமார் 10.30 மணியளவில் குறித்த சிறுவன் மீட்கப்பட்டுள்ளார்.
 
 
இது தொடர்பில்  விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிசார் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் ஒரு பெண் உட்பட ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.
 
ஏற்கனவே மூன்று பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில்  ஞாயிற்றுக்கிழமை மாலை காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பிரசேத்தில் வைத்து கனவன் மனைவி ஆகிய இரு சந்தேகநபர்களையும் பொலிசார் கைது செய்தனர்.
 
இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள இன்னுமொரு சந்தேக நபரை தேடி வருவதாகவும் குறித்த நபர் தலைமறைவாகியிருப்பதாகவும் பொலிஸ் வட்டார தகவல்களிலிருந்து தெரிய வருகின்றது.
 
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மஞ்சந்தொடுவாய் பிரசேத்தைச் சேர்ந்த முஹம்மட் சர்ஜுன் மற்றும் எம். றிபான், எம். றியாஸ் மற்றும் எம். றாபி அவரது மனைவியான எஸ். ஹபிலா ஆகிய ஐந்து சந்தேகநபர்கள் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 
இது தொடர்பாக மேலும் விசாரணைகள் இடம் பெற்றுவருவதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
 
சிறுவன் கடத்தப்பட்டிருப்பதாகவும் கடத்தியவர்கள் சிறுவனை விடுவிப்பதற்கு 30 இலட்சம் ரூபா கப்பம் கோரியிருந்த நிலையில் மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊறுகம் கிராமத்தில் வைத்து சிறுவன் மீட்கப்பட்டுள்ளார்.
 
உறுகாமம் கிராமத்தில் உள்ள வீடொன்றில் வைத்தே சிறுவன் மீட்கப்பட்டார். சிறுவனை கடத்திய பிரதான சந்தேகநபரான சிறுவனின் உறவு முறையான அசாம் எனும் இளைஞன் பதுளை வசிப்பிடமாகக் கொண்டவர் என்றும், கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக வந்திருந்து குறித்த சிறுவனின் வீட்டில் தங்கியிருந்துள்ளார் என்றும் தெரிய வருகின்றது.
 
(மட்டக்களப்பு குறூப் நிருபர் - ரீ.எல். ஜவ்பர்கான், புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் - எம்.எஸ். நூர்தீன்)
 

Add new comment

Or log in with...