எந்தவொரு விருதையும் “மெகா” ஆட்டத்தில் வெல்வது ஒவ்வொரு பாடசாலை கிரிக்கெட் வீரரினதும் கனவாகும் | தினகரன்

எந்தவொரு விருதையும் “மெகா” ஆட்டத்தில் வெல்வது ஒவ்வொரு பாடசாலை கிரிக்கெட் வீரரினதும் கனவாகும்

தேசிய அணியில் இணைவதற்கான தமது கனவை யதார்த்தமாக ஒப்சேவ்வர் மொபிட்டல் பாடசாலை மாணவர் கிரிக்கெட் போட்டி பெரும் ஆர்வத்தை ஊட்டியதாக முன்னாள் இலங்கை கிரிக்கெட் தலைவர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

மாத்தறை சென் சேர்வடியல் கல்லூரியில் பயின்ற சனத் ஜயசூரிய தமது பாடசாலை கிரிக்கெட் நாட்களை மகிழ்ச்சியாக நினைவு கூர்ந்தார்.

1988ல் இவர் ஒப்சேவர் கிரிக்கெட் வீரர் விருதைப் பெற்றார்.

சிறந்த துடுப்பாட்டக்காரர், சிறந்த பந்து வீச்சாளர், சிறந்த சகலதுறை வீரர் ஆகியனவே சகல பாடசாலை கிரிக்கெட் வீரர்களில் கனவாகும்.

பாடசாலை மட்டத்தில் அதுபோன்ற ஒரு விருதை பெறுவதைப் போன்று ஒன்றும் இல்லை.

சகல பாடசாலை கிரிக்கெட் மெகா நிகழ்வாக இது அமைந்துள்ளது. இது சகல பாடசாலை கிரிக்கெட் விருதுகளைப் பொறுத்தவரை தாய்போன்று அமைகிறது. ஜயசூரியாவின் கிரிக்கெட் வாழ்வில் 1988 ஆம் ஆண்டில் நிகழ்ந்த திருப்பு முனையாகும். இளம் வீரர என்ற வகையில் தமது பாடசாலை அதிபரான ஜீ. எல். கலப்பத்தியும், பயிற்றுவிப்பாளர் லயனல் முனசிங்கவும் கிரிக்கெட்டை ஊக்குவித்தனர்.

ஜயசூரியாவுக்கு அடுத்த மாதம் 48 வயதாகிறது.

ஒப்சேர்வர் பாடசாலை கிரிக்கெட் போட்டி மூலம் உருவாக்கப்பட்ட ஆறு இலங்கை தலைவர்களுள் இவரும் ஒருவராவார். ரன்ஜன் மடுகல்ல, அர்ஜுன ரனதுங்க, ரெஷான் மஹநாம, மர்வன் அத்தபத்து, தினேஷ் சந்திமால் போன்றொரும் ஒப்சேர்வர் கிரிக்கெட் மூலம் உருவானவர்களே!

இருதய உணர்வோடு விளையாடினால் வெற்றி வருமென ஜயசூரிய இளம் பாடசாலை கிரிக்கெட் வீரர்களுக்கு ஆலோசனை கூறினார்.

ஒரு சிறந்த வீரர் நெடு நேரத்தை செலவழிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து பின்னால் வெற்றிவரும்.

தான் கிரிக்கெட் விளையாட்டில் இத்தனை உயர்ச்சி காண்பேன் என நான் கருதவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு லேக்ஹவுஸ் நிறுவனம் மகத்தான சேவைகளைப் புரிந்துள்ளது. 1979 முதல் மெகா விழாக்களை நடத்தி கிரிக்கெட் விளையாட்டை முன்னேற்றியது.

இடைவிடாமல் தொடர்ச்சியாக லேக்ஹவுஸ் நிறுவனமும், சன்டே ஒப்சேவரும் நாட்டிலுள்ள இளசுகளைப் பொறுத்தவரை பாடசாலை கல்வி பூர்த்தியின் பின்னர் எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளனர்.

ஒப்சேவர் பாடசாலை மாணவர் கிரிக்கெட் போட்டி நாளுக்குநாள் பலமடைந்து வந்துள்ளது. இம்முறை 10 ஆவது வெற்றி வருடமாகும். இந்த மெகா நிகழ்வுக்கு எஸ்.எல்.டி மொபிடெல் நிதி உதவிகளைக் கொடுத்து வருகிறது. எஸ்.எல்.டி மொபிடெல் பிரதம நிறைவேற்று அதிகாரி நளின் பெரேரா இடையறாத முயற்சிகள் பலத்துக்கு மேல் பலமடைகின்றன.

இதற்காக அவருக்கும் நன்றி கூறுகிறோம்.

(எப்.எம்) 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...