ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராக மகாத்மா காந்தி பேரன் | தினகரன்

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராக மகாத்மா காந்தி பேரன்

ஜனாதிபதி தேர்தலில் மகாத்மா காந்தியின் பேரன் கோபால கிருஷ்ணா காந்தி எதிர்கட்சிகளின் ஒருமித்த பொது வேட்பாளராக நியமிக்கபடலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் நிறைவடைகிறது. எனவே புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான முழு வீச்சில் பாஜக ஈடுபட்டு வருகிறது. பாரதீய ஜனதா கட்சிக்கு போட்டியாக எதிர்க்கட்சிகளும் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளன. இதற்காக 9 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இது குறித்து கோபால கிருஷ்ண காந்தி செய்தியார்களிடம் கூறியதாவது:

'ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சி வேட்பாளராக நிறுத்தப்படுவது உண்மை தான், இது குறித்து பேசப்பட்டு வருகிறது. ஆனால், இது எல்லாம் ஆரம்ப காலத்தில் பேசப்படுபவை தான். இதற்கு மேல் இப்போது எதையும் கூற முடியாது,' என, தெரிவித்துள்ளார்.

கோபால கிருஷ்ண காந்தி 2004 முதல் 2009 வரை மேற்கு வங்க கவர்னராக பதவி வகித்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளராக பணியாற்றியவர். பல நாடுகளில் இந்திய தூதராக அவர் பணியாற்றி உள்ளார். 


Add new comment

Or log in with...