சீன நீர்மூழ்கி கப்பலுக்கு இலங்கை அனுமதி மறுப்பு | தினகரன்

சீன நீர்மூழ்கி கப்பலுக்கு இலங்கை அனுமதி மறுப்பு

அடுத்த வாரம் தங்கள் நீர்மூழ்கி கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்திவைப்பதற்கு சீனா இலங்கையிடம் அனுமதி கோரியிருந்தது. ஆனால் இலங்கை அதனை நிராகரித்துவிட்டது.

இது குறித்து பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சீனா எங்களிடம் அனுமதி கேட்டது. ஆனால் நாங்கள் அதனை மறுத்துவிட்டோம். இது ஒரு சிக்கலான விவகாரம்’’ என தெரிவித்தார்.

கடந்த 2014–ம் இதேபோல் சீனா அதன் நீர் மூழ்கி கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்திவைக்க அனுமதி கேட்டது. அப்போதைய ராஜபக்சே அரசு அதற்கு அனுமதி வழங்கியது.

இது குறித்து இந்தியா கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி கவலை தெரிவித்தது. பிரதமர் மோடி இலங்கைக்கு விஜயம் செய்ததால் சீனாவின் கோரிக்கையை இலங்கை நிராகரித்து இருப்பது முக்கியத்துவம் பெற்று உள்ளது. 


Add new comment

Or log in with...