கம்பளை நகரில் இரண்டு வயது குழந்தையுடன் இளைஞன் கடத்தல் | தினகரன்

கம்பளை நகரில் இரண்டு வயது குழந்தையுடன் இளைஞன் கடத்தல்

30 இலட்சம் ரூபா கப்பம் கோரி கம்பளையில் ஒரு குழந்தையும் இளைஞன் ஒருவரும் கடத்தப்பட்டுள்ளனர்.

மொஹமட் சல்மான் என்ற இரண்டரை வயது குழந்தையும்' குழந்தையின் உறவினரான மொஹமட் அஸாம் என்ற 23 வயது இளைஞனுமே கடத்தப்பட்டுள்ளனர். புதன் கிழமை மாலை கம்பளை கங்கவட்ட வீதியில் அமைந்துள்ள குழந்தையின் தந்தையின் வியாபார நிலையத்திற்கு சுமார் ஐம்பது யார் தூரத்தில் அமைந்துள்ள அவரின் வீட்டிலிருந்து இளைஞன் குழந்தையை தூக்கிக்கொண்டு வந்த சமயமே இருவரும் கடத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

சம்பவம் இடம்பெற்றதை அடுத்து, அன்றைய தினம் மதியம், கடத்தப்பட்டதாக கூறப்படும் இளைஞனின் தொலைபேசியூடாக குழந்தையின் தந்தையின் தொலைபேசியுடன் தொடர்பு கொண்ட கடத்தல் காரர்கள், இருவரும் பத்திரமாக இருப்பதாகவும் தாங்கள் மாலை 6 மணியளவில் மீண்டும் தொடர்பு கொள்வதாகவும் கூறி தொலைபேசியை துண்டித்து விட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை கடத்தல்காரர்கள் கூறியதைப்போன்று மீண்டும் தொடர்பு கொள்ளாமையையடுத்து இது குறித்து கம்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

இச்சம்பவம் தொடர்பாக கம்பளை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தீவிர விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்கடத்தப்பட்ட குழந்தையை தேடி விசாரணைகளை மேற்கொண்டுள்ள கம்பளை பொலிஸார் குழந்தையை பாதுகாப்பாக மீட்பதற்குரிய வேலைத்திட்டங்களையும் அரம்பித்துள்ளனர்.

லக்ஷ்மி பரசுராமன், கம்பளை நிருபர்

 


Add new comment

Or log in with...