106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி | தினகரன்

106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி

பிரிட்ஜ்டவுனில் நடந்து வரும் மேற்கிந்திய தீவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி மேற்கிந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவு அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் பிரிட்ஜ்டவுனில் நடைபெற்றது. மேற்கிந்திய தீவு முதல் இன்னிங்சில் 312 ஓட்டங்களும், பாகிஸ்தான் 393 ஓட்டங்களும் எடுத்தன. யாசிர்ஷாவின் அபார பந்துவீச்சால் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சில் தினறியது.

4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் அந்த அணி 268 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஹோப் 90 ஓட்டங்கள் எடுத்தார். யாசிர் ஷா 6 விக்கெட் வீழ்த்தினார். இந்நிலையில், 187 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 81 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஷனோன் கேப்ரியல் 5 விக்கெட்களை கைப்பற்றி 11 ஓட்டங்களை வழங்கினார். இவருடன் தலைவர் ஜேசன் ஹோல்டர் மூன்று விக்கெட்களை கைப்பற்றினார்.இப்போட்டியின் ஆட்டநாயகனாக இரு இன்னிங்ஸிலும் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய கேப்ரியல் தெரிவுசெய்யப்பட்டார்.

மேற்கிந்திய தீவு வெற்றியை தொடர்ந்து இரு அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடர் சமமாகியுள்ள நிலையில் இறுதி போட்டி மே மாதம் 10-ம் திகதி நடைபெறவுள்ளது. 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...