போராட்டத்திற்கு நிலத்தை வழங்கிய முஸ்லிம் சகோதரிக்கு நன்றி தெரிவிப்பு | தினகரன்

போராட்டத்திற்கு நிலத்தை வழங்கிய முஸ்லிம் சகோதரிக்கு நன்றி தெரிவிப்பு

 
கடந்த 38 நாட்களாக காணி உரிமை போராட்டத்தில் காலடி பதித்த முள்ளிக்குள கிராம மக்களுக்கு போராட்டம் நடாத்துவதற்கு ஏற்ற உதவிகளை மேற்கொண்ட முஸ்லிம் சகோதரிக்கு மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் உள்ளிட்ட, கத்தோலிக்க ஒன்றியம் நேற்று (03) புதன் கிழமை மாலை நேரில் சென்று நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
 
கடந்த 38 நாட்களாக காணி உரிமை போராட்டத்தில் காலடி பதித்த முள்ளிக்குளம் கிராம மக்களுக்கு போராட்டம் நடாத்துவதற்கும் இரவு பகலாக தனது காணியையும் கொடுத்து தேவையான உதவிகளை மேற்கொண்டு முஸ்லிம் சகோதரிக்கு மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை மற்றும் கத்தோலிக்க ஒன்றிய பிரதிநிதிகள் ஆகியோர் நேரில் சென்று நன்றிகளை  தெரிவித்துள்ளனர்.
 
 
முசலி பகுதியில் முள்ளிக்குளம் மக்களும் இஸ்லாமிய மக்களும் அன்று தொடக்கம் இன்று வரைக்கும் சகோதர பண்புகளோடு வாழ்ந்து வருகின்றனர்.
 
இந்நிலையில் முள்ளிக்குளம் மக்களின் காணி விடுவிப்பிற்கு முஸ்லிம் மக்களும் தமது ஆதரவை வழங்கி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
(மன்னார் நிருபர் - லம்பர்ட் ரொசாரியன்)
 
 

Add new comment

Or log in with...