Friday, April 19, 2024
Home » மொனராகலை விவசாயிகளுக்காக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள்

மொனராகலை விவசாயிகளுக்காக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள்

by sachintha
October 6, 2023 9:14 am 0 comment

மொனராகலை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளின் நன்மை கருதி 258 மில்லியன் ரூபா செலவில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஊவா மாகாண பிரதேச அபிவிருத்தி உதவித் திட்டத்தின் கீழ் மொனராகலை மாவட்டத்தில் 177 மில்லியன் ரூபா செலவில் வெல்லவாய வாராந்த சந்தை, வாகனத் தரிப்பிடம் ஆகியன அமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், இம்மாவட்டத்தில் சியம்பலாண்டுவ தொம்மகஹவல வாராந்த சந்தை 45 மில்லியன் ரூபா செலவிலும் மடுல்ல மாரி அராவ வாராந்த சந்தை 40 மில்லியன் ரூபா செலவிலும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த அபிவிருத்தித் திட்டங்களை மக்கள் பாவனைக்காக விவசாய இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்க்ஷ கையளித்து வைத்துள்ளார்.

ஊவா சுழற்சி நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT