பிரதமரின் விஜயத்தினால் பொருளாதார நன்மைகள் | தினகரன்

பிரதமரின் விஜயத்தினால் பொருளாதார நன்மைகள்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியாவுக்கு நேற்றுமு-ன்தினம் பயணமானார். இப்பயணமானது இலங்கையில் அதிக முக்கியத்துவம் கொடுத்து நோக்கப்படுகின்றது. ஏனெனில் பெற்றோலிய தொழிற்சங்க கூட்டமைப்பு சில தினங்களுக்கு முன்னர் நடாத்திய வேலைநிறுத்த தொழிற்சங்க நடவடிக்கையே இதற்குக் காரணமாக உள்ளது.

அதாவது பிரதமர் இந்தியாவுக்கான விஜயத்தின் போது திருகோணமலையிலுள்ள எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட உள்ளார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இத்தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதாக அத்தொழிற்சங்கம் தெரிவித்திரு-ந்தது.

ஆனால் பிரதமர் தம் பயணத்தை ஆரம்பிக்க முன்பே தம்மை சந்தித்த குறித்த தொழிற்சங்கக் கூட்டமைப்பிடம் அதற்கான எந்த இணக்கப்பாடும் எட்டப்படவுமில்லை. அவ்வாறு கைச்சாத்திடுவதுமில்லை என்று குறிப்பிட்டு எழுத்து மூல உத்தரவாதத்தையும் வழங்கினார். அதனடிப்படையில் வேலைநிறுத்த தொழிற்சங்க நடவடிக்கையும் கைவிடப்பட்டது.

இந்தப் பின்புலத்தில்தான் பிரதமரின் இந்திய விஜயம் அதிக முக்கியத்துவத்துடன் பார்க்கப்படுகின்றது. இந்தியாவுக்கான இராஜதந்திர விஜயத்தை ஆரம்பித்து நேற்றுமுன்தினம் புதுடில்லி சென்றடைந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முதல் நாள் இந்திய வெளிவிவகார அமைசர் சுஷ்மா சிவ்ராஜையும், இந்திரா காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, முனனாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் உள்ளிட்டோரையும் முதலில் சந்தித்து இருதரப்பு நட்புறவு குறித்து சினேகபூர்வ பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து பிரதமர் ரரேந்திர மோடியை நேற்றுமுன்தினமே அவரது ஹைதராபாத் உத்தியோபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்து இருபக்க உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து விரிவாகக் கலந்துரையாடினார். இப்பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கிடையில் ஆரம்ப காலம் முதல் நிலவி வரும் சமய, கலாசார, அரசியல் உறவுகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து மாத்திரமல்லாமல் பிராந்தி-யத்தின் சமூக, ​ெபாருளாதார அபிவிருத்தி குறித்தும் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.

அதனடிப்படையில் இந்து சமுத்திரத்தின் பொருளாதார மத்திய நிலையமாக இலங்கையை மேம்படுத்துவதற்கும், சமூக பொருளாதார கொள்கையின் மேம்பாட்டுக்கும் உதவி ஒத்துழைப்புகளை நல்கி பலமான இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு இச்சந்திப்பின் போது இரு நாட்டு பிரதமர்களும் இணக்கம் கண்டுள்ளனர்.

அதேநேரம் இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு, சுதந்திரமான கப்பல் போக்குவரத்து, பிராந்திய பொருளாதார அபிவிருத்தி என்பன குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் நீண்ட நேரம் கலந்துரையாடி இணக்கப்பாடுகளை எட்டியுள்ளனர். இரு நாடுகளுக்கும் மிகவும் பயனுள்ள வகையில் இடம் பெற்ற இப்பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரு பிரதமர்களுக்கும் முன்னிலையில் முக்கியத்துவம் மிக்க ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டது.

அந்நியோன்யமாகவும், சமமாகவும் நன்மைகளைப் பெற்று-க் கொள்ளும் வகையில் கூட்டு வியாபாரத் திட்டங்கள், ஏனைய ஒத்துழைப்பு நடவடிக்கைகள் மூலம் பாரிய பொருளாதார முதலீடு, அபிவிருத்தி ஒத்துழைப்பு என்பவற்றை மேம்படுத்தும் வகையில் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இவ்வுடன்படிக்ககையில் இந்தியா சார்பில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சுர் சுஷ்மா சிவராஜும், இலங்கை சார்ப்பில் அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவும் கையெழுத்திட்டனர.

இந்த உடன்படிக்கையின் அடிப்படையில் இயற்கை திரவ வாயு, சூரிய மின்சக்தி நிலையம், திருமலை நகரம், துறைமுகம், பொருளாதார அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி,- ரயில் சேவையை நவீனப்படுத்துதல், கொள்கலன் இறங்குதுறை அபிவிருத்தி, விவசாயம், கால்நடை உற்பத்தி, நீர் முகாமைத்துவம் போன்ற பல துறைகளில் இந்திய ஒத்துழைப்பை பெற்றுக் கொடுப்பதற்கு இந்த உடன்படிக்கையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் இச்சந்திப்பின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 'இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார். இதற்கு பதிலளிக்கும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ' இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடைடயில் நீண்ட காலமாக நிலவி வரும் நட்புறவை பழுதடையாமல் பாதுகாத்து மென்மேலும் நெருக்கமான உறவை வளர்த்தெடுப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காட்டும் ஆர்வத்தைப் பாராட்டுவதாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.

அந்த வகையில் பிரதமர் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு இம்முறை மேற்கொண்டிருக்கும் உத்தியோகபூர்வ விஜயம் இந்நாட்டுக்கு பலவித பொருளாதார நன்மைகளை கொண்டு வருவதோடு இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை மேலும் பலப்படுத்தி வலுப்படுத்தவும் உதவும் என்பதில் ஐயமில்லை.

அதேநேரம் பிரமதர் ரணில் விக்கிரமசிங்க எப்போதும் அயல் நாடான இந்நதியாவுடன் நெருக்கமான உறவைப் பேணி வலுப்படுத்துவதில் அக்கறை எடுத்து வருபவராவார். ஏனெனில் என்னதான் இருந்தாலும் எமக்கு பக்கத்து வீட்டுக்காரன் தான் எப்போதும் உற்ற நண்பனாக இருப்பான் என்ற அடிப்படையில் தான் அவர் செயற்பட்டு வருகின்றார்.

ஆகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இம்முறை இந்தியாவுக்கு மேற்கொண்டிருக்கும் விஜயம் இருநாடுகளுக்குமிடையிலான உறவில்'ஒரு மைல் கல்லாசக அமையும் என்பதே அவதானிகளின் கருத்தாக உள்ளது. அதேநேரம் இந்நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் இது வித்திடும்.


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...