சொந்த செலவில் சூனியமா? | தினகரன்

சொந்த செலவில் சூனியமா?

பொலிவுட் படங்களில் நடிப்பது தான் மிகவும் சௌகரியமாக இருப்பதாக ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார். பா. ரஞ்சித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய கபாலி படத்திற்கு பிறகு ராதிகா ஆப்தே உலா படத்தில் நடித்துள்ளார். அவர் பொலிவுட் படங்களில் தான் பிசியாக உள்ளார். இந்நிலையில் இது குறித்து அவர் கூறும்போது,

நான் தமிழில் புதுப்படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. ரஜினிகாந்த் சாருடன் நடிப்பது வாழ்வில் ஒரு முறை கிடைக்கும் அரிய வாய்ப்பு. நான் அவரின் தீவிர ரசிகை.

ரஜினிகாந்திடம் இருந்து அடக்கம், கடின உழைப்பு உள்ளிட்ட பலவற்றை கற்றுக் கொண்டேன். அவர் மிகப் பெரிய ஸ்டார். இருப்பினும் அது போன்று இல்லாமல் சாதாரணமாக பழகுவார்.

கபாலி 2 வருவதாக கூறுகிறார்கள். அப்படியா? எனக்கு எதுவும் இதுவரை தெரியவில்லையே. நான் தற்போது பேட்மேன் என்னும் இந்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

நான் தமிழ்ப் படங்களில் அவ்வளவாக நடிக்கவில்லை. அதனால் அது குறித்து பேச முடியாது. பொலிவுட்டில் எனக்கு மொழி தெரியும். அதனால் இங்கு தான் எனக்கு வசதியாக உள்ளது என்றார் ராதிகா.

தென்னிந்திய இயக்குனர்கள் பற்றி ராதிகா ஆப்தே விமர்சித்ததை அடுத்து அவரை ஒப்பந்தம் செய்ய யாரும் தயாராக இல்லை.

இந்நிலையில் பொலிவுட்டில் நடிப்பது வசதியாக உள்ளது என ராதிகா தெரிவித்துள்ளார். 


Add new comment

Or log in with...