Thursday, April 18, 2024
Home » 2024 நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலம் பாராளுமன்றில் நேற்று சமர்ப்பிப்பு

2024 நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலம் பாராளுமன்றில் நேற்று சமர்ப்பிப்பு

by sachintha
October 6, 2023 6:51 am 0 comment

ரூ.3,86,084 கோடியே 67,88,000 அரசாங்கம் ஒதுக்கீடு; ஜனாதிபதி, பிரதமரின் அமைச்சுகளுக்கு அதிக நிதி

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்துக்காக அரசினால் 03 இலட்சத்து 86,084 கோடியே 67,88,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம், சபை முதல்வரும் கல்வி அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்தவினால் நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

சமர்ப்பிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்காக மொத்தமாக 56,445 கோடியே 85,00,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடுகளில் ஜனாதிபதிக்கான செலவினம் மற்றும் அவரின் கீழ் வரும் அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகளுக்கென மொத்தமாக 1,23,711 கோடியே 61,15,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை பிரதமரின் செலவினம் மற்றும் அவரின் கீழுள்ள அமைச்சுக்களுக்கென 88,726 கோடியே 50,00,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இதில் ஜனாதிபதிக்கான செலவினமாக 660 கோடியே 11,50,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன் பிரதமரின் செலவினத்துக்காக 115 கோடியே 50,00,000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு 88,611 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன் இதில் வடக்கு மாகாணத்துக்கு 451 கோடியே 50,00,000 ரூபாவும் கிழக்கு மாகாணத்துக்கு 522 கோடியே 50,00,000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்துக்கான 03 இலட்சத்து 86,084 கோடியே 67,88,000 ரூபா ஒதுக்கீட்டில் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகளாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்காக 1,060 கோடி ரூபாவும் இதில் பௌத்தமதத்துக்காக 166 கோடி ரூபாவும் இந்து மதத்துக்காக 28 கோடியே 30 இலட்சம் ரூபாவும் கிறிஸ்தவ மதத்துக்காக 21 கோடி ரூபாவும் இஸ்லாம் மதத்திற்காக 18 கோடி ரூபாவும் மிகுதி ஏனைய திணைக்களங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதி, பொருளாதார உறுதிப்பாடு, மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சுக்காக 72,343 கோடியே 14,95,000 ரூபாவும் பாதுகாப்பு அமைச்சுக்காக 42,372 கோடியே 50,00,000ரூபாவும் வெகுசன ஊடக அமைச்சுக்காக 255 கோடி ரூபாவும் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுக்காக 412 கோடியே 5,10,00,000 ரூபாவும் சுகாதார அமைச்சுக்காக 41,028 கோடியே 99,98,000 ரூபாவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்காக 1,961 கோடியே 20,25,000 ரூபாவும் வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சுக்காக 231 கோடியே 90,00,000 ரூபாவும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்காக 4,036 கோடியே 8,40,00,000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கமத்தொழில் அமைச்சுக்காக 10,042 கோடியே 32,80,000 ரூபாவும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சுக்காக 4,298 கோடியே 30,00,000 ரூபாவும் சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சுக்காக 1,917 கோடியே 47,30,000 ரூபாவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்காக 4,245 கோடி ரூபாவும் கல்வி அமைச்சுக்காக 23,705 கோடி ரூபாவும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சுக்காக 1,000 கோடி ரூபாவும் கைத்தொழில் அமைச்சுக்காக 910 கோடியே 83,00,000 ரூபாவும் கடற்றொழில் அமைச்சுக்காக 7,00 கோடி ரூபாவும் சுற்றாடல் அமைச்சுக்காக 213 கோடி ரூபாவும் வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சுக்காக 871 கோடியே 30,00,000 ரூபாவும் நீர்வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சுக்காக 726 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சுக்காக 7,453 கோடியே 4,00,000 ரூபாவும் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமானச்சேவைகள் அமைச்சுக்காக 707 கோடியே 50,00,000 ரூபாவும் தொழில் நுட்பம் மற்றும் முதலீட்டு அமைச்சுக்காக 542 கோடியே 68,00,000 ரூபாவும் முதலீட்டு மேம்பாடு அமைச்சுக்காக 339 கோடியே 76,70,000 ரூபாவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்காக 14,073 கோடியே 35,00,000 ரூபாவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்காக 689 கோடியே 80,00,000 ரூபாவும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சுக்காக 1,050 கோடி ரூபாவும் நீர்ப்பாசன அமைச்சுக்காக 8,395 கோடி ரூபாவும் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT