சாயிஷாவுக்கு சிபாரிசு | தினகரன்

சாயிஷாவுக்கு சிபாரிசு

ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள படம், வனமகன். ஜெயம் ரவி, சாயிஷா சைகல் ஜோடி. இது ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கும் 50வது படம். ஆடியோ சி.டியை பாலா, ராஜுமகாலிங்கம், ஐசரி கணேஷ் வெளியிட்டனர்.

மறைந்த கவிஞர் நா.முத்துக்குமாரின் மகன் ஆதவன் பெற்றுக்கொண்டார். ஜெயம் ரவி பேசுகையில், ‘நான் ரொம்பவும் நல்லவன் என்று நினைத்துக்கொண்டு வந்தேன். ஆனால், டைரக்டர் விஜய்யை சந்தித்த பிறகு, நிச்சயம் நான் நல்லவன் இல்லை என்று உணர்ந்தேன். நான் வனமகன் என்றால், விஜய் தெய்வமகன். இனிமேல் சாயிஷாவின் கால்ஷீட் கிடைப்பது ரொம்ப கஷ்டம். இப்போதே அவரை படத்தில் ஒப்பந்தம் செய்துவிடுங்கள்.

கண்டிப்பாக அவர் ஒரு ரவுண்டு வருவார். நான் செய்யும் வேலை போரடித்துவிடக் கூடாது என்றுதான், வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன்’ என்றார்.

சாயிஷா சைகல், தம்பி ராமய்யா, பிரகாஷ்ராஜ், பொன்வண்ணன், சரண்யா, போஃப்டா தனஞ்செயன், மோகன் ராஜா, ஸ்டன்ட் மாஸ்டர் சில்வா, எடிட்டர் மோகன், ஒளிப்பதிவாளர் திரு, உதயா உட்பட பலர் கலந்துகொண்டனர். 


There is 1 Comment

Pages

Add new comment

Or log in with...