மீதொட்டமுல்ல மக்களுக்கு வவுனியாவில் அஞ்சலி | தினகரன்


மீதொட்டமுல்ல மக்களுக்கு வவுனியாவில் அஞ்சலி

 
கொழும்பு, மீதொட்டமுல்ல குப்பை மேட்டு சரிவில் உயிரிழந்த மக்களின் ஆத்மா சாந்திப் பிரார்த்தனையும், அஞ்சலி நிகழ்வும் வவுனியா புளியடி பிள்ளையார் ஆலயத்தில் இன்று காலை இடம்பெற்றது.
 
புளியடி ஆலய பரிபாலன சபை, தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பு மற்றும் மாவட்ட அந்தணர் ஒன்றியம் ஆகியன இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
 
கொழும்பு, மீதொட்டமுல்ல பகுதியில் புதுவருடத் தினத்மதன்று இடம்பெற்ற அனர்த்தத்தில் மரணித்த மக்களுக்கு ஆத்ம சாந்தி வேண்டி விசேட பிரார்த்தனை இடம்பெற்றதுடன், தீபங்கள் ஏற்றி, கற்பூரம் கொழுத்தியும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன். 
 
 
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமார, வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தம், சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.வாசன், தமிழ் மணி அகளங்கன், தமிழ் விருட்சம் தலைவர் செ.சந்திரகுமார், அந்தணர்கள், வர்த்தகர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
 
(வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தபுரன்)
 
 

Add new comment

Or log in with...