தடை செய்யப்பட்ட 32 ஆயிரம் லீற்றர் களைநாசினிகள் மீட்பு | தினகரன்

தடை செய்யப்பட்ட 32 ஆயிரம் லீற்றர் களைநாசினிகள் மீட்பு

 
தடை செய்யப்பட்ட க்ளைபொசேற் (Glyphosate) களைநாசினிகளை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
 
160 பீப்பாக்களில் அடைக்கப்பட்ட சுமார் 32,000 லீற்றர் க்ளைபொசேற் இரசாயனத் திரவமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
 
கிராண்ட்பாஸிலுள்ள சுங்கத் திணைக்களத்திற்கு சொந்தமான கொள்கலன் சேமிப்பகத்திலிருந்த சந்தேகத்திற்கிடமான இரு கொள்கலன்களை சோதனையிட்டபோதே குறித்த இரசாயனப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
 
கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரால் இவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதோடு, சீனாவிலிருந்தே இவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
 

Add new comment

Or log in with...