மஞ்சள் நீராட்டு விழாவில் கத்திகுத்து; ஒருவர் பலி

ஹட்டன், குடாஓய தோட்ட திருவிழாவில் கத்தி குத்துக்கு இலக்காகி ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன், நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் ஹட்டன் மற்றும் கண்டி ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் கண்டி ஆஸ்பத்திரியின் அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் (18) 8 மணியவில் இடம்பெற்றுள்ளது. ஒரு பிள்ளையின் தந்தையான 28 வயதுடைய எம் புஸ்பராஜ் என்பவரே கத்திக் குத்துக்கு இலக்காகி மரணமாகியுள்ளார்.

ஹட்டன்,குடாஒயா தோட்டத்தில் முத்துமாரியம்மன் ஆலயத்தின் 5 ஆம் நாள் திருவிழாவின் இறுதி நாளான (18) மஞ்சள் நீராட்டு விழா இடம்பெற்றது. கரகம் கோவிலை சென்றடைந்தவேளை சனக் கூட்டத்துக்குள் மிகவேகமாக முச்சக்கர வண்டியை ஒருவர் செலுத்தி வந்துள்ளார்.

சனக்கூட்டம் நிறைந்துள்ளதால் மெதுவாகச் செல்லுமாறு மக்கள் எச்சரித்துள்ளனர். இந்த சர்ச்சை பின்னர் கைகலப்பாக மாறி கத்திக்குத்து வரை சென்றுள்ளது. கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றதில் ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன் மேலும் நால்வர் படுகாயமடைந்து டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டிக்கு மாற்றப்பட்டனர்.

மேலதிக சிகிச்சைக்காக இருவர் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர் மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை (19) ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

ஹட்டன் சுழற்சி நோட்டன் பிரிட்ஜ் நிருபர்கள் 

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
16 + 3 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

Or log in with...