இரு வாரங்களில் அரச நிறுவனங்களில் மாற்றம் | தினகரன்

இரு வாரங்களில் அரச நிறுவனங்களில் மாற்றம்

 
மீதொட்டமுல்ல அறிக்கை ஒரு வாரத்தில்
 
மீதொட்டமுல்ல அனர்த்தம் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் தலைமையிலான குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
 
அரச மற்றும் தனியார் ஊடகங்களின் பிரதானிகள், ஊடகங்களின் ஆசிரியர்களுடன் இன்று (20) கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
 
குறித்த அறிக்கையை ஒரு மாத காலத்தினுள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளதோடு, மக்களாலும் உரிய அதிகாரிகளாலும் அதற்கு அவசியமான அனைத்து தகவல்களையும் வழங்குவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 
அது போன்று எதிர்வரும் இரு வாரங்களுக்குள், அரச நிறுவனங்களின் பதவிகளில் மாற்றங்களை ஏற்படுத்தி அரச நிறுவனங்களில் மாற்றம் ஏற்படும் எனவும் நாட்டின் பொருளாதாரத்தை பலம் மிக்கதாகவும் நிலைபேறானதாகவும் மாற்றுவதன் மூலம் முன்னோக்கி பயணிக்க முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேசன தெரிவித்தார்.
 
அதேவேளை, தற்போது இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள வெளிநாட்டு முதலீடு 5 பில்லியன் டொலர்களை தாண்டியுள்ளதாக அவர் இதன் போது சுட்டிக் காட்டினார்.
 
 

Add new comment

Or log in with...