வெனிசுவேலாவில் பிரமாண்ட அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் | தினகரன்

வெனிசுவேலாவில் பிரமாண்ட அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

வெனிசுவேலாவில் ஜனாதிபதி நிகொலஸ் மடுரோ அரசுக்கு எதிராக இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டங்களில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

தலைநகர் கரகாசில் இளைஞன் ஒருவரும் கொலம்பிய எல்லைக்கு அருகிலுள்ள சான் கிறிஸ்டோபலில் பெண் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தலைநகருக்கு தெற்காக தேசிய காவல்படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

புதிய ஜனாதிபதி தேர்தலை நடத்தக் கோரியும், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை விடுதலை செய்யக் கோரியும் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று முன்தினம் பேரணி நடத்தினர். எனினும் எதிர்க்கட்சியினர் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியதாக மடுரோ குற்றம்சாட்டியுள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் கடைகளில் கொள்ளையிட்டதாகவும் 30க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதாகவும் ஜனாதிபதி குற்றம்சாட்டியுள்ளார்்.

கரகாஸில் அரச ஆதரவாளர்களும் போட்டி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.

உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புக் கொண்ட நாடான வெனிசுவேலா கடந்த பல ஆண்டுகளாக பணவீக்கம், குற்றச்செயல்கள் மற்றும் அடிப்படை உணவுப் பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவு மிகப்பெரிய ஆர்ப்பாட்டமாக நாடெங்கும் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் ஜனாதிபதி மடுரோ அரசுக்கு அழுத்தம் கொடுக்க எதிர்க்கட்சியினர் எதிர்பார்த்துள்ளனர். 


Add new comment

Or log in with...