ரஷ்ய போர் விமானங்களை இடைமறித்த அமெ. ஜெட்கள் | தினகரன்

ரஷ்ய போர் விமானங்களை இடைமறித்த அமெ. ஜெட்கள்

அமெரிக்க வான் பகுதிக்குள் நெருங்கி வந்த இரு ரஷ்ய போர் விமானங்களை அமெரிக்க விமானங்கள் இடைமறித்து திருப்பி அனுப்பியுள்ளன.

அலஸ்கா கடற்கரையில் சர்வதேச வான் பகுதியிலேயே இரு ரஷ்ய குண்டு போடும் விமானங்கள் இடைமறிக்கப்பட்டதாக அமெரிக்க இராணுவம் குறிப்பிட்டுள்ளது. தொழில்சார் மற்றும் பாதுகாப்பான முறையில் விமானங்கள் இடைமறிக்கப்பட்டதாக பென்டகன் பேச்சாளர்களில் ஒருவரான கரி ரோஸ் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றிருக்கும் சம்பவத்தில் ரஷ்ய விமானங்கள் அமெரிக்காவின் அலஸ்கா கொடியாக் தீவுக்கு 100 மைல்களுக்குள் நெருங்கி வந்ததாக பொக்ஸ் நியூஸ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்போது அமெரிக்க ஜெட் விமானங்கள் ரஷ்ய போர் விமானங்களை 12 நிமிடங்கள் பின்தொடர்ந்ததோடு அதனை அடுத்து அந்த இரு விமானங்களும் கிழக்கு ரஷ்யாவை நோக்கி பறந்துள்ளன.

அமெரிக்க இராணுவத் தலையீடு குறித்த பல நிகழ்வுகளின் தொடர்ச்சியாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அண்மைய மாதங்களில் ரஷ்ய உளவு விமானம் ஒன்று அமெரிக்க கடற்கரையில் இருமுறை காணமுடிந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 


Add new comment

Or log in with...