சிரிய இரசாயன தாக்குலில் சரீன் வாயு இருப்பது உறுதி | தினகரன்

சிரிய இரசாயன தாக்குலில் சரீன் வாயு இருப்பது உறுதி

சிரியாவில் இம்மாத ஆரம்பத்தில் இடம்பெற்ற இரசாயன தாக்குதலில் சரீன் வாயு அல்லது அது போன்ற ஒரு பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக அது பற்றி சோதனை மேற்கோண்ட இரசாயன அயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பத்து பேரது மாதிரிகள் நான்கு ஆய்வு கூடங்களில் சோதிக்கப்பட்டதாக மேற்படி அமைப்பின் தலைவர் அஹமட் உசும்கு குறிப்பிட்டுள்ளார். கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு கான் ஷெய்க்கூன் நகரில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் குறைந்தது 87 பேர் கொல்லப்பட்டனர். எனினும் தம்மிடம் எந்த இரசாயன ஆயுதமும் இல்லை என்று சிரிய அரசு கூறி வருகிறது.

இந்த தாக்குதலை அடுத்து பொதுமக்கள், பெரும்பாலும் சிறுவர்கள் வாயில் நுரைகக்கிய நிலையிலும் மூச்சுத்திணறிய நிலையிலும் இருக்கும் வீடியோக்கள் வெளியாகி இருந்தன. “நான்கு ஆய்வு கூடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் சரீன் அல்லது சரீன் போன்ற கொருள் வெளிப்பட்டுள்ளது. இதுபற்றி மேலதிக விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். இந்த ஆய்வு முடிவுகள் மறுக்க முடியாததாகும்” என்று உசும்கு கூறினார். 


Add new comment

Or log in with...