அருகாமை நட்சத்திரத்தில் உயிர் இருக்க சாத்தியம் கொண்ட கிரகம் | தினகரன்

அருகாமை நட்சத்திரத்தில் உயிர் இருக்க சாத்தியம் கொண்ட கிரகம்

சூரிய குடும்பத்திற்கு அப்பால் உயிர்கள் இருப்பதற்கான சாத்தியம் கொண்ட அருகாமை நட்சத்திரத்தை வலம் வரும் ‘சுப்பர் ஏர்த்’ வேற்று கிரகத்தை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

எல்.எச்.எஸ் 1140பி என பெயரிடப்பட்டிருக்கும் இந்த கிரகம் 40 ஒளியாண்டு தொலைவில் இருக்கும் நட்சத்திரத்தை திரவ நீர் இருக்க சாத்தியம் கொண்ட மண்டலத்தில் வலம் வருகிறது. இந்த கிரகம் தனது நட்சத்திரத்தில் கூடிய வெப்பம் அல்லது கூடிய குளிர் இல்லாத தூரத்தில் உள்ளது.

எனவே இந்த கிரகத்தில் நீர் இருக்கும் பட்சத்தில் அது பனிப்பாறை போன்றோ அல்லது நீராவியாகவோ இன்றி திரவ நீராக இருக்கும் என்று வானியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு மிதமான காலநிலை மண்டலத்தில் உள்ள வேற்று உலகங்கள் இதற்கு முன்னரும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தபோதும் எல்.எச்.எஸ் 1140பி இருக்கும் இடம் குறிப்பிடத்தக்கதாகும். வானியலாளர்களால் அதனை தெளிவாக அவதானிக்கக்கூடிய சாத்தியம் அதிகமாக உள்ளது.

வானியற் பெளதீகத் துறைக்கான ஹார்வர்ட் ஸ்மித்சோனியன் மையத்தின் தலைமையிலான இந்த கண்டுபிடிப்பு குறித்த விபரம் ஜெர்னல் நேச்சர் சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.

இதில் எல்.எச்.எஸ் 1140பி கிரகம் சிவப்பு குள்ள நட்சத்திரம் ஒன்றையே வளம் வருகிறது. இது எமது சூரியனை விடவும் சிறியதும் அதிக குளிர்ச்சியானதுமாகும். 


Add new comment

Or log in with...