திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த செல்லப்பிள்ளை சம்பியன் | தினகரன்

திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த செல்லப்பிள்ளை சம்பியன்

கம்பஹா மாவட்ட வளர்ந்தோர் மெய்வல்லுநர் சங்கம் நடத்திய போட்டியில் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த ஜே.என்.செல்லப்பிள்ளை 90 வயதுக்கு மேற்ட்டவர்களுக்கான பிரிவில் 3 தங்கப் தங்கப்பதக்கங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

இம்மாதம் முதலாம், இரண்டாம் திகதிகளில் கம்பஹா சிறிமாவோ பண்டாரநாயக்கா விளையாட்டு அரங்கில் இப்போட்டிகள் நடைபெற்றது. ஜே.என்.செல்லப்பிள்ளை 100 மீற்றர் போட்டியில் புதிய சாதனை ஒன்றினையும் ஏற்படுத்தி உள்ளார். 2012ம் வருடம் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த எச்.ஜி.பி.ஜயசேகர என்பவர் 38.5 செக்கன் நேரத்தில் ஓடி ஏற்படுத்தி இருந்த சாதனையை முறியடித்து புதிய சாதனையை ஏற்படுத்தி உள்ளார். செல்லப்பிள்ளை 90 வயதுக்கு மேற்ட்டவர்களுக்கான போட்டியில் 30.7 செக்கன் நேரத்தில் ஓடியே இச்சாதனையை ஏற்படுத்தி உள்ளார்.

மேலும் இவர் 200 மீற்றர் போட்டியிலும். 5000 மீற்றர் போட்டியிலும் பங்கு கொண்டு முதலிடங்களை; பெற்றுள்ளார். 35, 40, 45, 50, 55, 60, 65, 70,75, 80, 85, 90 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இடையே இப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த வருடம் நுவரேலியா மாவட்ட மெய்வல்லுநர் சங்கம் நடத்திய போட்டியிலும் ஜே.என்.செல்லப்பிள்ளை பங்கு கொண்டு 100 மீற்றர், 200 மீற்றர், 5000 மீற்றர் வேகநடை போட்டிகளில் தங்கப்பதக்கங்களைப் பெற்றிருந்தார்.

தம்பலகாமம் நிருபர் 


Add new comment

Or log in with...