காக்கைத்தீவு நலன்புரிச் சங்கத்தின் புத்தாண்டு விழா | தினகரன்

காக்கைத்தீவு நலன்புரிச் சங்கத்தின் புத்தாண்டு விழா

கொழும்பு -15, மட்டக்குளி காக்கைத்தீவு நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சிங்கள – தமிழ் புத்தாண்டு விழா – 2017 எதிர்வரும் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

சிங்கள – தமிழ் புத்தாண்டு விழா – 2017 நிகழ்வுள் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காக்கைதீவு விளையாட்டு மைதானத்தில் காலை 7 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெறும்.

முக்கிய விளையாட்டு நிகழ்வுகளாக 16- -10 வயதிற்குட்பட்டவர்களுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டி, 16 வயதிற்குட்பட்டோருக்கான மரதன் ஓட்டப்போட்டி உட்பட 20 க்கும் மேற்பட்ட போட்டிகள் அன்றைய தினம் இடம்பெறவுள்ளன.

அன்றைய தினம் இடம்பெறும் அனைத்துப் போட்டிகளிலும் காக்கைதீவு வீடமைப்புத் திட்டத்தில் குடியிருக்கும் குடியிருப்பாளர்களும் அவர்களது குடும்ப அங்கத்தவர்களும் மாத்திரம் கலந்துகொள்ள முடியுமென காக்கைதீவு நலன்புரிச் சங்கத்தின் நிர்வாகக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலதிக தகவல்களை எஸ்.கவாஸ்கார் தவிசாளர் (0777531069) மற்றும் கயான் சில்வா செயலாளர் (07162058884) ஆகியோரின் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ள முடியும். 


Add new comment

Or log in with...