சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்; தென்னாபிரிக்க அணி அறிவிப்பு | தினகரன்

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்; தென்னாபிரிக்க அணி அறிவிப்பு

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட தென்னாபிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் முதல் முறையாக ஒரு நாள் போட்டி அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். அதேபோல், 2016ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு ஒரு நாள் போட்டியில் விளையாடாத வேகப்பந்து வீச்சாளர் மோர்னி மோர்கலும் அணிக்கு திரும்பியுள்ளார்.

ஆனால், அணியின் புயல் வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயின் துரதிஷ்டவசமாக அணியில் இடம்பெறவில்லை. காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத காரணத்தால் அவரை அணியில் இணைத்துக்கொள்ள முடியவில்லை என அணி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

தென்னாபிரிக்க அணி விவரம் வருமாறு: டிவில்லியர்ஸ் (அணித்தலைவர்), ஹசிம் அம்லா, குயின்டான் டி கொக், பாப் டு பிளிஸ்சிஸ், டுமினி, டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், வெய்ன் பார்னல், பெலுக்வாயோ, ரபடா, இம்ரான் தாஹிர், கேஷவ் மகராஜ், பிரிடோரியஸ், பெஹர்டைன், மோர்னி மோர்கல்.

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் ஜூன் 1ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை இங்கிலாந்தில் நடக்கின்றது. இத்தொடருக்கு முன்பாக இங்கிலாந்துடன் தென்னாபிரிக்க அணி 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த போட்டியிலும் இதே அணியே விளையாடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடரின் முதல் போட்டி மே மாதம் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 


Add new comment

Or log in with...