பஸ்ஸின் முன் சில்லில் சிக்கி வயோதிப பெண் பலி | தினகரன்

பஸ்ஸின் முன் சில்லில் சிக்கி வயோதிப பெண் பலி

பஸ்ஸின் முன் சில்லில் சிக்குண்டு 68 வயது பெண்ணொருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று சாமிமலை கவரவில பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்து மஸ்கெலியா சாமிமலை பிரதான வீதியில் கவரவில சிங்கள வித்தியாலயத்திற்கு அருகில் நேற்று மதியம் 1 மணியளவில் இடம்பெற்றதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

மஸ்கெலியாவிலிருந்து சாமிமலை நோக்கி சென்ற தனியார் பஸ்ஸில் பயணித்த குறித்த வயோதியப் பெண்ணே, பஸ்ஸிலிருந்து இறங்கி சென்றபோது, தான் பயணித்த அதே பஸ்ஸின் முன் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் சாமிமலை ஸ்டர்ஸ்பி தோட்டத்தைச் சேர்ந்த முத்தையா அமரஜோதி (வயது – 68) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து ஆத்திரமுற்ற பிரதேச மக்கள் கற்களை எறிந்து பஸ்ஸை சேதப்படுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றநிலை உருவானதையடுத்து பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

குறித்த பஸ்ஸின் சாரதியை கைது செய்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஹட்டன் சுழற்சி, விசேட நிருபர்கள் 


Add new comment

Or log in with...