சசிகலா குடும்பத்தினர் நீக்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும் | தினகரன்

சசிகலா குடும்பத்தினர் நீக்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும்

இரு அணிகள் இணைவதில் சிக்கல் உள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும். சசிகலா குடும்பத்தினர் நீக்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு ஓபிஎஸ் அணி கூறி உள்ளது.

இரு அ.தி.மு.க அணிகள் இணைப்புத் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் கே.பி.முனுசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் மேலும் கூறியதாவது:-

சசிகலா, டிடிவி தினகரனிடம் ராஜினாமாக் கடிதத்தைப் பெற வேண்டும்.தினகரனை வெளியேற்றி நாடகம் நடத்துகின்றனர்.சசிகலா குடும்பத்தினர் நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர். கட்சியில் இருந்து சசிகலா, தினகரன் இருவரையும் வெளியேற்றுவதை அறிக்கையாக தர வேண்டும்.தக அமைச்சர்கள் தான்தோன்றி தனமாக பேசுகிறார்கள். தம்பிதுரை எடப்பாடி பழனிசாமிதான் முதல் அமைச்சர் என்கிறார். நாங்கள் முதல் அமைச்சர் பதவி வேண்டும் என நாங்கள் கேட்டோமா கேட்கவில்லை.

சசிகலா, தினகரனிடம் ராஜினாமா கடிதம் பெற வேண்டும்.தேர்தல் ஆணைத்தில் சசிகலா பொது செயலாளர் தினகரன் துணைப்பொது செயலாளர் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்யபட்டது. இதனை வாபஸ் பெற வேண்டும். சசிகலா குடும்பத்தின் முதலமைச்சராக பழனிசாமி உள்ளார். மக்கள் செல்வாக்கு இல்லாத அணியாக சசிகலா தரப்பினர் உள்ளனர். பக்குவமில்லாத அரசியல்வாதியாக ஜெயக்குமார் இருக்கிறார். அவமானப்படுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார்கள்.

சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டாயத்தின் பேரில் மாற்று அணியில் உள்ளனர். முதலமைச்சர் உள்ளிட்ட பதவிகளை நாங்கள் கேட்கவில்லை. தேர்தல் நடந்தால் ஓ.பன்னீர்செல்வம்தான் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார். சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டாயத்தின் பேரில் மாற்று அணியில் உள்ளனர். சசிகலா குடும்பத்தை சேர்ந்த 30பேரும் நீக்கப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வேண்டும்.

யாரோ ஒருவர் பாதுகாப்பில் மக்கள் செல்வாக்கு தொண்டர்கள் செல்வாக்கு இருப்பதால் எங்களுடன் சேரத்துடிக்கிறார்கள். மக்கள் செல்வாக்குள்ள ஒரே தலைவர் பன்னீர்செல்வம் மட்டும் தான். எப்போது தேர்தல் நடந்தாலும் பன்னீர்செல்வத்தை முதலமைச்சராக்க மக்கள் தயாராகி விட்டார்கள்.

எங்கள் கோரிக்கை ஏற்கப்படாதபோது பேச்சுவார்த்தை எப்படி நடைபெறும். எடப்பாடி அணியில் இருக்கும் எம்.எல்.ஏக்களும் முதலமைச்சராக பன்னீர்செல்வம் தான் வரவேண்டும் என விரும்புகிறார்கள். 


Add new comment

Or log in with...