கவர்னருடன் தம்பிதுரை, ஜெயக்குமார் சந்திப்பு | தினகரன்

கவர்னருடன் தம்பிதுரை, ஜெயக்குமார் சந்திப்பு

தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் நேற்று சந்தித்தனர்.

ஓபிஎஸ் மற்றும் இடைப்பாடி பழனிசாமி ஆகிய இரு அணியினரும் இணைவது தொடர்பாக ஓபிஎஸ் அணியினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இரு அணியினரும் ஒன்று சேர்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், தம்பிதுரை மற்றும் ஜெயக்குமார் நேற்று(ஏப்ரல் 20) கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதன் பின்னர் தம்பிதுரை கூறுகையில், இந்த சந்திப்பில் அரசியல் முக்கியத்துவம் கிடையாது. மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். கவர்னர் எனது நண்பர். மும்பையிலும் அவரை சந்தித்தேன். பல காலங்களாக எங்கள் நட்பு தொடர்கிறது. இவ்வாறு அவர் கூறினார். 


Add new comment

Or log in with...