இந்திய இடங்களுக்கு பெயர் வைத்த சீனா | தினகரன்

இந்திய இடங்களுக்கு பெயர் வைத்த சீனா

இந்தியாவுடன் பிரச்சினைக்குரிய பிராந்தியத்தின் ஆறு இடங்களுக்கு சீனா புதிய பெயர்களை அறிவித்துள்ளது. அந்த பிரதேசம் சீனாவின் இறைமை கொண்ட பகுதியென சீன வெளியுறவு அமைச்சு நேற்று அறிவித்தது.

கிழக்கு இமயமலை பிராந்தியமான அருணாச்சல் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்தபோது அதற்கு உரிமை கோரும் சீனா அந்த பிராந்தியத்தை தெற்கு டிபெத் என்று அழைத்து வருகிறது.

இந்நிலையில் சீன சிவில் விவகார அமைச்சு அங்குள்ள ஆறு இடங்களுக்கு புதிய பெயர்களை வெளியிட்டுள்ளது. இவை சீன இன மக்கள் அழைக்கும் பெயர்கள் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

சீனா ஆபத்தான பிரிவினைவாதி எனக் கருதும் டிபெத் ஆன்மீகத் தலைவரான தலய் லாமா இந்திய மற்றும் சீன எல்லை பகுதிக்கு இம்மாதத்தில் மேற்கொண்ட விஜயம் சீனாவிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீனா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உறவு அண்மைக்காலத்தில் விரிவடைந்தபோதும் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினை தொடர்ந்தும் பதற்றம் கொண்டதாகவே இருந்து வருகிறது. 


Add new comment

Or log in with...