3000 ஆண்டு எகிப்து மம்மிகள் கண்டுபிடிப்பு | தினகரன்

3000 ஆண்டு எகிப்து மம்மிகள் கண்டுபிடிப்பு

எகிப்து லக்சோர் நகரின் அரசர்கள் பள்ளத்தாக்கிற்கு அருகில் உள்ள கல்லறை ஒன்றில் இருந்து எட்டு மம்மிகள், வண்ணமயமான சவப்பெட்டிகள் மற்றும் 1000க்கும் அதிகமான இறுதிச்சடங்கு சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த சிலைகள் மரணித்தவரின் மறுவாழ்வுக்கு உதவும் என்ற நம்பிக்கையில் வைக்கப்படுகின்றன. இந்த தொல்பொருட்கள் குறைந்தது 3000 ஆண்டுகள் பழமையானவை என நம்பப்படுகிறது.

அரசர்கள் பள்ளத்தாக்கானது கி.மு 11 ஆம் நூற்றாண்டுவரை சுமார் 500 ஆண்டுகள் பேரோக்கள் மற்றும் அரச மரியாதைக்குரியவர்களை அடக்கம் செய்யும் இடமாக இருந்துள்ளது.

இந்த கல்லறை ட்ரா அபுல் நகா கல்லறைக்கு அருகில் உள்ளது. அது நீதிபதியாக பணியாற்றிய அரச மரியாதைக்குரிய ஒருவருடையதாகும்.

கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் சவப்பெட்டிகள் நன்கு பாதுகாக்கப்பட்டு நீலம், கறுப்பு, சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் நிறம் பூசப்பட்டுள்ளன.

இந்த கல்லறை ஆங்கில எழுத்தான டீ வடிவில் அமைந்திருப்பதோடு ஒரு திறந்த வெளி பகுதியாது ஒரு செவ்வக மண்டபம், தாழ்வாரம் மற்றும் உள்ளக அறைக்கு இட்டுச் செல்வதாக உள்ளது என்று எகிப்தின் தொல்பொருட்கள் அமைச்சின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 30 அடி கொண்ட சுரங்கவாயிற்குழிக்குள் இருந்தே சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் மற்றொரு அறையில் அகழ்வாராய்ச்சி பணிகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


Add new comment

Or log in with...