விஸ்டம் சர்வதேச பாடசாலையின் தர்கா நகர் கிளையின் வருடாந்த இல்ல விளையாட்டு | தினகரன்

விஸ்டம் சர்வதேச பாடசாலையின் தர்கா நகர் கிளையின் வருடாந்த இல்ல விளையாட்டு

விஸ்டம் சர்வதேச பாடசாலையின் தர்கா நகர் கிளையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு வைபவம் தர்கா நகர் பாக்கிர் மாக்கார் விளையாட்டரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

அதிபர் எம்.என்.எம். மதனி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பேருவளை பிரதேச சபை முன்னாள் தலைவர் ஏ.ஆர்.எம். பதியுதீன், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஹஸீப் மரிக்கார், விஸ்டம் சர்வதேச பாடசாலை பணிப்பாளர் பத்ரியா பௌஸர் ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்து கொண்டனர்.

சிறார்களின் விளையாட்டு மற்றும் கலை கலாசார நிகழ்ச்சிகளும் நடைபெற்றதோடு போட்டியில் வெற்றி பெற்ற சிறார்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

விஸ்டம் சர்வதேச பாடசாலை சிறார்களின் விளையாட்டு திறமைகளை இங்கு பேருவளை பிரதேச சபை முன்னாள் தலைவர் ஏ.ஆர்.எம். பதியுதீன் பாராட்டினார். விளையாட்டு போட்டியானது தேகாரோக்கியத்திற்கும் வெற்றி தோழ்விகளை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தையும் ஏற்படுத்துவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். விஸ்டம் சர்வதேச பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கும் இதன்போது பல போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

(பேருவளை விஷேட நிருபர்) 


Add new comment

Or log in with...