டென்னிஸ் தரவரிசையில் செரீனா மீண்டும் முதலிடம் | தினகரன்

டென்னிஸ் தரவரிசையில் செரீனா மீண்டும் முதலிடம்

புதிய தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள அமெரிக்க ஜாம்பவான் செரீனா வில்லியம்ஸ் முதலிடத்திற்கு முன்னேறுகிறார்.

சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் தற்போது முதலிடம் வகிக்கிறார்.

இந்த நிலையில் வருகிற 24-ம் திகதி வெளியாகும் புதிய தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள அமெரிக்க ஜாம்பவான் செரீனா வில்லியம்ஸ் முதலிடத்திற்கு முன்னேறுகிறார்.

தரவரிசை கணக்கீட்டில் கடந்த ஆண்டு ஜெர்மனியின் ஸ்டட்ஹர்ட் நகரில் நடந்த போர்சே டென்னிஸ் போட்டியின் முடிவு நீக்கப்படுவதன் மூலம் செரீனாவுக்கு மீண்டும் முதலிட ஜாக்பாட் அடித்துள்ளது.

ஏஞ்சலிக் கெர்பர், ஸ்டட்ஹர்ட் டென்னிசில் நடப்பு சம்பியன் ஆவார். இந்த ஆண்டுக்கான ஸ்டட்ஹர்ட் டென்னிஸ் போட்டி 24-ம் திகதி முதல் 30-ம் திகதி வரை நடக்கிறது. இதில் அரைஇறுதிக்கு கெர்பர் முன்னேறினால், மறுபடியும் முதலிடத்தை தட்டிப்பறிக்கலாம். 


Add new comment

Or log in with...