குஜராத்தை வீழ்த்தி வெற்றியை தனதாக்கியது பெங்களூர் | தினகரன்

குஜராத்தை வீழ்த்தி வெற்றியை தனதாக்கியது பெங்களூர்

ஐ.பி.எல் தொடரில் குஜராத் லயன்ஸ் அணியுடனான போட்டியில் ரோயல் சலஞ்சர்ஸ் அணி 21 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

தொடரின் 20 ஆவது போட்டியாக ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற குஜராத் லயன்ஸ் களத்தடுப்பை தெரிவுசெய்ய ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

துடுப்பாட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் நிறைவில் 2 விக்கெட்களை இழந்த பெங்களூர் அணி 213 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அணியின் சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய கெய்ல் 77 ஓட்டங்களையும் விராட் கோஹ்லி 64 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து 214 என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய குஜராத் லயன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் நிறைவில் 7 விக்கெட் இழப்புக்கு 192 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொள்ள 21 ஓட்டங்களால் பெங்களூர் அணி வெற்றியை தனதாக்கியது.

குஜராத் லயன்ஸ் அணியின் சார்பில் துடுப்பாட்டத்தில் மக்கலம் அதிகபட்சமாக 72 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். போட்டியின் ஆட்டநாயகனாள கெய்ல் தெரிவானார்.

இந்த போட்டியின் வெற்றிமூலம் 2 புள்ளிகளை பெற்றுக் கொண்ட பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணி ஒட்டுமொத்தமாக 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்திலுள்ளது. குஜராத் லயன்ஸ் அணி 2 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலுள்ளது. 


Add new comment

Or log in with...