சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை உடன் கூட்ட எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை | தினகரன்

சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை உடன் கூட்ட எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை உடனே கூட்ட எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். சபாநாயகர் தனபாலை சந்தித்து மனு அளித்த பின் ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.

மானியக் கோரிக்கை குறித்து விவாதிக்க சட்டமன்றத்தை கூட்ட வேண்டும். சட்டமன்ற கூட்டத்தை கூட்டுவதாக சபாநாயகர் உறுதி அளித்துள்ளாதாக ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நிர்வாகம் ஸ்தம்பித்துவிட்டதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக பெரா மாபியா அணி, மணல் மாபியா அணி என இரண்டாக உள்ளது. ஒரே அணியாக ஊரை கொள்ளையடித்தவர்கள் இன்று இரு அணியாக கொள்ளையடிக்கின்றனர் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிடுவது திமுகவின் மரபு அல்ல என ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். விவசாயிகள் பிரச்சினைகளுக்கு அதிமுக அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மேலும் அரை மணி நேரம் காத்திருந்தும் முதலமைச்சர் எங்களை சந்திக்கவில்லை என்று அவர் புகார் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவரையை சந்திக்காத முதல்வரா விவசாயிகளை சந்திக்கப் போகிறார் என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது எனவும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். 


Add new comment

Or log in with...