இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது நேற்று (05) இடம்பெற்ற அதன் கூட்டத்தில் துணைநில் வைப்பு வசதி வீதத்தினை 11% இலிருந்து 10 வீதமாகவும், துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினை 12% இலிருந்து 11 வீதமாகவும் 1% இனால் குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளது.
2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழான (CBA) நாணயக் கொள்கை சபையின் முதலாவது நாணயக் கொள்கை மீளாய்வு நேற்று (04) இடம்பெற்ற போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
உள்நாட்டுப் பொருளாதாரத்தில் குறைந்த பணவீக்கம் மற்றும் சாதகமான பணவீக்க எதிர்பார்ப்புகள் உட்பட தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் முன்னேற்றங்களை கவனமாக ஆய்வு செய்ததைத் தொடர்ந்து சபை இந்த முடிவை எடுத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
பொருளாதாரம் அதன் சாத்தியமான வளர்ச்சியை அடைய. இவ்வாறு கொள்கை வட்டி விகிதங்கள் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Monetary_Policy_Review_No_07_of_2023_Tamil