பனையறுப்பான் பகுதியில் துப்பாக்கிச்சூடு; கைகலப்பு | தினகரன்

பனையறுப்பான் பகுதியில் துப்பாக்கிச்சூடு; கைகலப்பு

 
நால்வர் வைத்தியசாலையில் அனுமதி
 
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனையறுப்பான் பகுதியில், ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருந்த போது, அவர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
 
இச்சம்பவம் நேற்று (12) இரவு 09.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். 
 
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார்.
 
 
இச்சம்பவத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின்பேரில், ஒருவர் கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
 
இச்சம்பவத்தையடுத்து, அப்பகுதியில் உள்ள இரு குடும்பங்களுக்கு இடையில் நடைபெற்ற கைகலப்பில் நால்வர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
குறித்த சம்பவத்தில் காயங்களுக்குள்ளானவர்கள் நால்வரும் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
(பெரியபோரதீவு தினகரன் நிருபர் - வ. சக்திவேல்)
 
 
 

Add new comment

Or log in with...