பேராதனை பகிடிவதை; கைதான 15 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு | தினகரன்

பேராதனை பகிடிவதை; கைதான 15 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

 
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீட புதிய மாணவர்களை பகிடிவதைக்குட்படுத்திய  குற்றச்சாட்டின் பேரில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட மாணவர்கள் 15 பேரையும்  மீண்டும் எதிர்வரும் 24ம் திகதி  வரையும்   விளக்கமறியலில் வைக்கும் படி கண்டி பிரதான நீதிமன்றம்  இன்று (11) உத்தரவிட்டுள்ளது.
 
கடந்த பெப்ரவரி மாதம் 20ம் திகதி முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள  பல்கலைக்கழக மாணவர்களது வழக்கு விசாரணை, இன்று (11) கண்டி பிரதான நீதவான் கிஹான் இந்திக்க அத்தநாயக்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மாணவர்கள் சார்பாக  சட்டத்தரணி மகத்தூன் மூலம் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டிருந்த பிணை மனுவை நிராகரித்த நீதவான், குறித்த மாணவர்களுக்கு பிணை வழங்க மறுத்த நீதவான் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கும் படி உத்தரவிட்டார். 
 
மேலும் குறித்த பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் இதுவரை காலமும்  பிணைகோரி நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள நான்கு மனுக்களும் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்
 
பல்கலைக்கழக சிரெஷ்ட மாணவர்கள் சிலர், பேராதனை – கலஹா வீதியில், பத்தாயிரம் ரூபாவுக்கு பெற்றுக் கொண்ட வாடகை வீடொன்றில் வைத்து, விவசாய பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்கள் 8 பேரை மிகவும் பொடூரமான முறையில் பகிடிவதைக்கு உட்படுத்தியிருந்தனர்.
 
பல்கலைக் கழக ஒழுக்காற்று மேற்பார்வையாளர்களக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து,  பொலிஸ் குழுவொன்று குறித்த வீட்டை சுற்றி வளைத்து  மாணவர்களை கைது செய்து கண்டி நீதிமன்றில் ஆஜர்படுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
(எம்.ஏ. அமீனுல்லா)
 
 

Add new comment

Or log in with...