காணாமல் போன இருவர்; ஒருவர் சடலமாக மற்றையவர் உயிருடன் மீட்பு | தினகரன்

காணாமல் போன இருவர்; ஒருவர் சடலமாக மற்றையவர் உயிருடன் மீட்பு

 
மட்டக்களப்பில் இடம்பெற்ற இரு வேறு காணாமல் போன சம்பவங்களில், ஒருவர் சடலமாகவும் ஒருவர் கை, கால் கட்டப்பட்ட நிலையில் சடலமாகவும் மீட்கப்பட்டுள்ளனர்.
 
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காங்கேயனோடை பிரசேத்தில் நேற்று (10) திங்கட்கிழமை மாலை கடத்தப்பட்ட இளைஞர் ஒருவர் (11) செவ்வாய்க்கிழமை அதிகாலை, கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
 
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காங்கேயனோடை பிரசேத்தைச் சேர்ந்த கலீல் மஸ்பி (28) எனும் இவ்விளைஞர் இனம் தெரியாத சிலரினால் நேற்று (10) திங்கட்கிழமை மாலை கடத்தப்பட்டுள்ளார்.
 
இது தொடர்பில் அவரது சகோதரருக்கு கிடைத்த தகவலை அடுத்து, குறித்த இளைஞரை தேடி வந்த அவரது சகோரர்கள் மற்றும் நண்பர்கள் குறித்த இளைஞன் காங்கேயனோடை பிரசேத்திலுள்ள ஈரான் சிட்டி கிராமத்திலுள்ள வயல் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இதையடுத்து குறித்த இளைஞனின் சகேதரர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.
 
குறித்த இளைஞன் மீது தாக்குதல் நடதாப்பட்டுள்ளதாகவும் காயமடைந்துள்ள இந்த இளைஞன் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தார்.
 
இது தொடர்பில் காத்தான்குடி பொலிசார் விசாணைகளை நடாத்தி வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
 
இதேவேளை, காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த வாகரை மாங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 
வாகரை, மாங்கேணியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான பிள்ளையான் தேவராசா (41) என்பவர் கடந்த 09 ஆம் திகதி தனது வீட்டிலிருந்து வழமை போன்று  மாடு மேய்ப்பதற்காக சென்றதாக தெரிவிக்கப்படும் நிலையில், காணாமல் போயுள்ளார். 
 
இது தொடர்பாக அவரின் மனைவி வாகரை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை செய்திருந்தார்.
 
இது தொடர்பாக வாகரை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், மட்டக்களப்பு, இவரின் சடலத்தை இன்று (11) காலை, வட்டுவான் நீரோடையிலிருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.
 
இது தொடர்பாக வாகரை பொலிசார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.
 
(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் - எம்.எஸ். நூர்தீன்)
 
 

Add new comment

Or log in with...