இளைஞர் கடத்தல் விவகாரம்; இரு சந்தேகநபர்கள் அடையாளம் | தினகரன்

இளைஞர் கடத்தல் விவகாரம்; இரு சந்தேகநபர்கள் அடையாளம்

 
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காங்கேயனோடை பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் (10) திங்கட்கிழமை மாலை இளைஞர் ஒருவர் கடததப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் அடையாளப்படுத்தப்பட்டு, தேடப்பட்டு வருவதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
 
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காங்கேயனோடை பிரசேத்தில் கடந்த திங்கட்கிழமை (10) மாலை கடத்தப்பட்ட இளைஞர் ஒருவர் நேற்று (11) செவ்வாய்க்கிழமை அதிகாலை, கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், வயல் வெளியில் வைத்து மீட்கப்பட்டார்.
 
காத்தான்குடி பொலிசார் குறித்த இளைஞனிடம் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து இரண்டு சந்தேகநபர்கள் அடையாளப்படுததப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
 
இவர்கள் இருவரும் தலைமறைவாகி இருப்பதாகவும் இவர்களை தேடி வருவதாகவும் தெரிவித்த பொலிசார், இது தொடர்பான விசாரணைகள்  தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
 
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காங்கேயனோடை பிரசேத்தைச் சேர்ந்த கலீல் மஸ்பி (28) எனும் இளைஞர் கடத்தப்பட்ட நிலையில், அவரது சகோரர்கள் மற்றும் நண்பர்களால், குறித்த இளைஞன் காங்கேயனோடை பிரசேத்திலுள்ள ஈரான் சிட்டி கிராமத்திலுள்ள வயல் ஒன்றிலிருந்து மீட்டுள்ளனர்.
 
குறித்த இளைஞன் மீது தாக்குதல் நடாத்தப்பட்டு, காயமடைந்த நிலையில், தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
(புதிய காததான்குடி தினகரன் நிருபர் - எம்.எஸ். நூர்தீன்)
 

Add new comment

Or log in with...