உள்ளூர் துப்பாக்கிகள், ரி56 ரவைகளுடன் ஒருவர் கைது | தினகரன்

உள்ளூர் துப்பாக்கிகள், ரி56 ரவைகளுடன் ஒருவர் கைது

வைப்பக படம்
 
அனுமதிப்பத்திரமின்றி, உள்ளூரில் தயாரிக்கப்பட்ட சட்டவிரோத வேட்டைத் துப்பாக்கிகள் (Galkatas Shot Gun) இரண்டு மற்றும் T56 வகை துப்பாக்கி ரவைகள் 15 ஆகியவற்றுடன் நபர் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இரத்தினபுரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, உடனிரியெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர், நேற்றைய தினம் (09) பிற்பகல் 2.25 மணியளவில், அதே பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
 
30 வயதான குறித்த நபர், இராணுவத்தில் கடமையாற்றிய ஒருவர் என தெரியவந்துள்ளது.
 
சந்தேகநபரை இன்று (10) இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
 
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
 

Add new comment

Or log in with...