திருகோணமலையில் டெங்கு கட்டுப்பாட்டுக்குள் | தினகரன்

திருகோணமலையில் டெங்கு கட்டுப்பாட்டுக்குள்

 
திருகோணமலையில் தற்போது டெங்கு கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது என பிராந்திய சுகாதார வைத்திய சேவைகள் பணிப்பாளார் பி. கயல்விழி தெரிவித்தார்.
 
இன்று (10) திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
சுகாதார துறை மட்டுமல்லாது பல துறை சார்ந்த அமைப்புக்கள் மற்றும் பொது மக்களின் பங்களிப்புடனேயே டெங்கு நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம் என அவர் தெரிவித்தார். 
 
இக்கலந்துரையாடலில் மலேரியா தடுப்பு இயக்கத்தின் பதிவாளர் வைத்தியர் என். சரவணபவனும் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தொடரந்து அவர் கருத்து தெரிவிக்கையில்  திருகோணமலை மாவட்ட ரீதியாக 3438 பேர் டெங்கு நோயால் பாதிப்புக்கள்ளாகி இருந்தனர். 
இதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
மாவட்டத்தில் உள்ள 12 சுகாதார சேவைகள் பணி மனை பிரிவுகளில் 5 பிரிவுகள் உயர் டெங்கு தாக்க பிரதேசங்களாக கொள்ளப்படுகிறது.
 
இதில்,
- கிண்ணியா 1344 பேர் பாதிப்பு 9 இறப்பு
- திருகோணமலை பிரிவில் 787 பேர் பாதிப்பு 1 இறப்பு
- உப்புவெளி பிரிவில் 602 பேர் பாதிப்பு இறப்பு இல்லை
- மூதூரில் 528 பேர் பாதிப்பு 01 உயிரிழப்பு
- குறிஞ்சாக்கேணி பிரிவில் 177 பேர் பாதிப்பு 3 பேர் உயிரிழப்பு
- குச்சவெளி 21 பேர் பாதிப்பு 1 உயிரிழப்பு 
பதிவாகியுள்ளது எனத் தெரிவித்தார்.
 
தற்போது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட இந்த டெங்கு நோயை முற்று முழுதாக ஒழிக்க வேண்டுமானால் வீடுகளில் உள்ள சீமெந்து நீர் தொட்டிகள் முற்றாக அகற்றப்பட வேண்டும். அதற்குப் பதிலாக மூடியுடன் கூடிய பிளாஸ்டிக் தாங்கிகளை பாவிக்க வேண்டும்.என்றார்.
 
தொடர்ந்து மலேரியா தடுப்பு இயக்கத்தின் பதிவாளர் வைத்தியர் என். சரவணபவன் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது,
 
உள்ளுராட்சி மன்றங்களின் கழிவு அகற்றல் நடவடிக்கைகளில் கை வண்டி மூலமாக தினமும் டெங்கு நளம்பு பெருகக் கூடிய சிறிய கழிவுகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 
கிராம மட்டத்தில் டெங்கு தடுப்பு குழுக்களை அதிகமாக உருவாக்கி வருகின்றொம். தற்போது டெங்கு நுளம்பு பெருகும் இடங்களாக, பயன்படுத்தாமல் உள்ள மலசல கூடங்களையும் பூட்டியுள்ள வீடுகளையும் குறிப்பிடலாம்.
 
குறிப்பாக அரசாங்க உத்தியோகத்தர்களின் விடுதிகள் இதில் குறிப்பிடத்தக்க ஒன்றாக காணப்படுகிறது. 
 
தொடர்ச்சியாக டெங்கை கட்டப்படுத்த புகை விசுறுதல் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே டெங்கு நோயாளர் அடையாளம் காணப்பட்ட இடத்தில் இருந்து 200 மீற்றருக்கு உட்பட்ட இடங்களுக்கு புகை விசுறப்படுகிறது என, மலேரியா தடுப்பு இயக்கத்தின் பதிவாளர் வைத்தியர் என். சரவணபவன் தெரிவித்தார்.
 
(அன்புவழிபுரம் தினகரன் நிருபா் - வடமலை ராஜ்குமார்)
 
 

Add new comment

Or log in with...