"தீர்வுக்கான பலம்" ஸ்ரீல. சு. க. இளைஞர்கள் தயார் | தினகரன்

"தீர்வுக்கான பலம்" ஸ்ரீல. சு. க. இளைஞர்கள் தயார்

எதிர்வரும் காலங்களில் இரண்டு வகையான தேர்தல்கள் நடத்துவதற்கான ஆயத்தம் நடைபெற்று வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது. அதில் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலாகும். இரண்டாவது பல பிரதேச சபைகளின் ஆயுட் காலம் முடிவடைவதால் நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலாகும். அதன்படி சப்ரகமுவ, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாண சபை தேர்தல்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடத்த ஏற்பாடாகியுள்ளது.

மாகாண சபைகளின் அரசியலமைப்பின்படி அவற்றின் தேர்தல்களைத் தள்ளிப்போட முடியாது. காலம் முடிந்த பின் மாகாணசபைகள் தேர்தலை தள்ளிப்போட மாகாண சபைகள் சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

மாகாண சபைகளின் தேர்தல் அனைத்தும் ஒரே தினத்தில் நடைபெற வேண்டும் என்பது பேச்சுவார்த்தை மட்டத்தில் இருந்தாலும் அதற்கு சில முதலமைச்சர்கள் விருப்பமில்லை எனத் தோன்றுகின்றது. அப்படியென்றால் குறிப்பிட்ட காலத்தின் ஏதாவது மத்தியஸ்தத்துக்கு வர வேண்டும்.

ஒரே நாளில் தேர்தல் நடத்த மாகாண சபைகளை கலைப்பதென்றால் முதலமைச்சர்களின் ஒருமைப்பாடு அவசியம் இல்லாவி்ட்டால் மாகாணசபை அரசியலமைப்புக்கு திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும். முதலமைச்சர்களின் ஒப்புதலின்றி அவ்வாறான திருத்தங்களை கொண்டு வருவது சரியில்லை. இவ்வாறான பின்னணியில் நிச்சயமாக வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபை தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தின் பின் நடைபெறும்.

அதைத் தவிர புதிய தேர்தல் முறையிலான உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான திருத்தம் மற்றும் எல்லை நிர்ணய நடவடிக்கைகளில் உள்ள பிரச்சினைகள் தற்போது முடிவை எட்டியுள்ளது.

உள்ளூராட்சி அமைச்சர் கடந்த நாட்களில் நடைபெற்ற ஊடக பேச்சுவார்த்தையின் போது உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை விரைவில் நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி தனக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகக் கூறியுள்ளார்.

தேர்தலுக்கான ஆயத்தம்

எவ்வாறாயினும் சிங்கள- தமிழ் புது வருடத்தின் பின் இரண்டு தேர்தல்களுக்கு அரசியல் கட்சிகள் தயாராக வேண்டியுள்ளது. சில தொகுதிகளுக்கு புதிய அமைப்பாளர்கள் நியமித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதற்குத் தயாராகிறது. இம்மாத இறுதியில் சரிவர செயல்படாத அமைப்பாளர்களை நீக்கிவிட்டு புதிய அமைப்பாளர்களை நியமிப்பதே அதன் நோக்கமாக உள்ளது. ஸ்ரீல.சு. கட்சி எதிர்வரும் தேர்தலுக்கு பெரும் பலத்துடன் தயாராகி வருவதாகத் தெரிகின்றது. தற்போது அக்கட்சிக்கு புதிய தலைமை கிடைத்துள்ளது. அது சாதாரண தலைமையல்ல. ஜனாதிபதியின் தலைமையாகும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளவர் இந்நாட்டின் அதாவது ஜனாதிபதியாக 2015ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி அப்பதவிக்கு சத்தியப்பிரமாணம் செய்ததன் மூலமே தலைவரானார். இரண்டு வருடம் கட்சியில் பல முரண்பட்ட கருத்துக்களுக்கு முகங்கொடுத்து இன்று கட்சித் தலைவராக உள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர் ஒருவர் இவ்வாறான நெகிழ்வுத் தன்மையுடன் ஜனநாயகவழியில் நடக்கும் தலைவரை காண்பதரிது. தற்போதைய ஜனாதிபதி பல தசாப்தங்களாக ஸ்ரீலங்கா சு. கட்சியின் இளைஞர் அணியிலிருந்தே அரசியலில் ஈடுபட்ட கட்சியின் சிரேஷ்ட தலைவராவார். அதேபோல் 13 வருடங்களாக ஆட்சியின் பிரதான செயலாளராக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். சாதாரணமாக கட்சியின் செயலாளரால் கட்சியின் ஆழத்தை சரியாகப் பார்க்க முடியுமென்ற கூற்றும் உள்ளது.

எவ்வாறாயினும் கட்சி புதிய ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுக்க கட்சியின் இளைஞர் அணியை பலப்படுத்துவதன் மூலமே ஆரம்பித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இளைஞர் மாநாடு சிறந்த உதாரணமாகும். ஸ்ரீ. ல. சு. கட்சி இளைஞர் மாநாட்டை கடந்த 13 வருடங்களாக நடத்தவில்லை.

13 வருடமாக மகாநாட்டை நடத்தாததன் மூலம் அக்கட்சியின் எதிர்காலம் மற்றும் பயணம் எவ்வாறு அமைந்திருக்கும் என யூகித்திக் கொள்ள முடியுமல்லவா. இளைஞர்களை ஆண்டு விழாக்களுக்கு கொண்டு செல்வது மேதினக் கூட்டங்களுக்கு செல்வது போன்றவற்றையே செய்தார்கள். ஆனால் அரசியல் கொள்கைகள் அவர்களுக்கு தெளிவுபடுத்தி இளைஞர் அணியை உருவாக்கவோ இளைஞர் யுவதிகளுக்கு அரசியல் கல்வியை வழங்கவோ அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அவர்களை அவ்வாறு அறிவூட்டினால் தங்களது தலைமைப் பதவிக்கு ஆபத்து ஏற்படுமென எண்ணினார்களோ தெரியாது. ஆனால் ஜனாதிபதி மைத்திரி அந்நடைமுறையிலிருந்து விலகி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகத் தெரிகின்றது. அவர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் “கல்வி அகடெமி” ஒன்றை ஆரம்பித்தார்.

இளைஞர் பலம்

தொகுதி அமைப்புகளை அமைப்பதற்கு தாமதமாவது ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியினர் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடும் 4 தொகுதகளில் என்று கூறப்படுகிறது. அத் தொகுதிகளிலும் புதிய அமைப்பாளர் மூலம் தொகுதி அதிகார சபைகளை அமைக்கும் இறுதி தினமும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இலட்சக்கணக்கான அங்கத்தவர்கள் புதிய இளைஞர் அதிகார சபையின் அங்கத்துவத்தைப் பெற்றுள்ளார்கள்.

எந்தவொரு கட்சியினதும் உயிர்துடிப்பு இளைஞர் சக்தி என புதிதாகக் கூறத் தேவையில்லை. இளைஞர் பலமில்லாத அரசியல் கட்சிகள் வயோதிபர் மடங்களுக்கு சமனானது. இந்நாட்டின் சம்பிரதாய இடதுசாரி கட்சிகளின் இளைஞர்கள் வெளியேறியதனால் இன்று அவற்றின் நிலைமை கண்கூடாகத் தெரிகின்றது. அரசியல் சித்தாந்தம் இல்லாத இளைஞர்களுக்கு நாளை என்பதில் எவ்வித பலனுமில்லை. இம்முறை ஸ்ரீல. சு. கட்சியின் இளைஞர் மாநாடு புதிய சக்தியுடன் ஆரம்பிக்கும்.

சர்வதேச அரசியலுக்கு பதிலளிக்கும் வகையில் நடுநிலையான இளைஞர் திட்டத்தின் ஆரம்பமாகும். அது தீர்வுக்கு சக்தி என அறிமுகப்படுத்தப்படுவது இவ்வுயகத்தின் சவாலான கேள்விகளுக்கு தொனிப்பொருளாக மாத்திரம் அமையாது. தீர்வுகளை வழங்கும் இளைஞர் திட்டமாகவே இருக்கும். எதிர்வரும் மாகாணசபை, உள்ளூராட்சி சபைகளின் தேர்தல்களில் இளைஞர்களின் சக்தியை பாவிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஜனாதிபதியும் தயாராவது தெளிவாகின்றது. அதற்கான ஆயத்தம் மற்றும் ஒத்திகையே கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

 

வசந்தபிரிய ராமநாயக்க
தமிழில்-: வயலட்


Add new comment

Or log in with...