துமிந்த சில்வாவுக்கு ரூபா 3,000 தண்டப்பணம் | தினகரன்


துமிந்த சில்வாவுக்கு ரூபா 3,000 தண்டப்பணம்

 
சொத்துகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பிலான விபரங்களை வெளியிடவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வழக்கில், தனது குற்றத்தை துமிந்த சில்வா ஒத்துக்கொண்டுள்ளார்.
 
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வா, குறித்த வழக்கு தொடர்பில், இன்று (06) கொழும்பு நீதவான் நீதிவன்றில் ஆஜராகியதோடு, குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டார்.
 
இதனை அடுத்து, குறித்த 3 வழக்குகள் தொடர்பில் அவருக்கு ரூபா 3000 அபராதம் விதிக்கப்பட்டதோடு, அவ்வாறு செலுத்தத் தவறும் நிலையில் குறித்த ஒவ்வொரு வழக்கிற்கும் ஒரு மாதம் வீதம் சிறைத் தண்டனை விதிப்பதாக நீதவான் உத்தரவிட்டார்.
 
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்‌ஷ்மன் கொலை வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வா, கடந்த 2011, 2013, 2014 ஆகிய ஆண்டுக்கான தனது சொத்து விபரங்களை வெளியிடவில்லை எனத் தெரிவித்து அவருக்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 

Add new comment

Or log in with...