ஐப்பானியர் கொழும்பில் குண்டு வீசியதும் மக்களின் உயிர் காக்கப் போராடியவர் | தினகரன்

ஐப்பானியர் கொழும்பில் குண்டு வீசியதும் மக்களின் உயிர் காக்கப் போராடியவர்

இற்றைக்கு 74 ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானியர் கொழும்பு மீது குண்டு வீசிய போது, மக்கள் பாதுகாப்புக்குப் பணி புரிந்தவர் வார்டன் சி. எம். சாஹுல் ஹமீட். அவர் மறைந்து இன்றுடன் 42 ஆண்டுகளாகின்றன.

பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் போது 1942 ஆம் ஆண்டு சித்திரை மாதம் ஐந்தாம் திகதி காலை 7.42 மணியளவில் ஜப்பானியர் இலங்கை தலைநகர் கொழும்பின் மீது விமானத்திலிருந்தவாறு குண்டுகளைப் போட்டு சேதப்படுத்தினர். தலைநகர் வெறிச்சோடியிருந்தது. இப்பயங்கர வேளையில், வார்டன் ஹமீத் அவர்கள் மக்களைக் காப்பாற்ற பல வழிகளிலும் தீவிரமாக செயலில் ஈடுபட்டிருந்தார். விமானம் மூலம் வெடிகுண்டுகள் வீசப்பட்டவுடன் பாரிய சேதம் ஏற்பட்டது. வார்டன் சாஹுல் ஹமீட் காயப்பட்ட மக்களை வைத்திய நிலையங்களுக்கு அனுப்புவதற்கு ஒழுங்கு செய்ததுடன் இங்கை பாதுகாப்புப் படை, தீயணைக்கும் படைகளின் துறைமுக தீயணைக்கும் படைகளின் ஒத்துழைப்புடன் பணி புரிந்தார். .

தெமட்டகொடையில் (கொழும்பு 8) வாழ்ந்த அமரர் வார்டன் ஹமீதின் வாரிசாக இன்று அவர்களின் 5 பெண் பிள்ளைகளும், 2 ஆண் பிள்ளைகளும் குடும்பத்துடன் வாழ்கின்றனர். "முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாச எனது தந்தைக்கு நினைவு முத்திரை வெளியிட ஏற்பாடு செய்தார். ஆனால் அன்றைய தபால் அமைச்சு உத்தரவிடவில்லை" என்று அவரது பிள்ளைகள் கூறுகின்றனர்.

1923 – 24 ஆம் ஆண்டுகளில் வார்டன் சாஹுல் ஹமீத் சென் சோபியா என்ற பெயரில் பஸ் கம்பெனியொன்றையும் சொந்தத்தில் நடத்தினார்.

அக் கம்பனியில் 12 பஸ் வண்டிகள், (கண்டி – கொழும்பு, காலி – கொழும்பு, இரத்தினபுரி – கொழும்பு, கொழும்பு – புத்தளம்) வீதிகளில் அன்று ஓடின.

சொடாவா மோட்டோ சர்விஸ் என்ற பெயரில் லொறிச் சேவையும் நடாத்தினார். இதில் நான்கு இலட்சம் நஷ்டம். நான் அதன் பின் பெரிதும் முறிந்து போனேன். என்று அன்றைய சம்பவத்தை நினைவூட்டினார் அவரது மகனான கலாபூஷணம் எஸ். எச்.எம். இதிரிஸ். மக்களைக் காத்த வீரர் வார்டன் ஸி. எம். சாஹுல் ஹமீத் அவர்கள் காட்டிய சேவை மனப்பான்மையையும் தீரத்தையும் பாராட்டி எற்பாடு செய்யப்பட்ட வைபவம் ஒன்று கொழும்பில் நடைபெற்றது. விமானத் தாக்குதல் பாதுகாப்புப் படையின் நான்காவது பிரிவின் தலைவர் வார்டன் டி. எல். எஃப். பேதிரிஸ் தலைமை வகித்த இவ்வைபவத்தில் நகரின் விமானத் தாக்குதல் பாதுகாப்புப் படையின் பிரதம வார்டன் கேர்ணல் கே. ஜி. வென்டர் ஸ்மெட், சிவில் பாதுகாப்பு ஆணையாளர் ஓ. ஈ. குணதிலக ஆகியோர் கலந்துகொண்டு தீரச் செயலைப் பாராட்டிப் பத்திரம், வெற்றிக் கிண்ணம் வழங்கினர்.

கவசத் தொப்பி அணிந்து பணி புரிந்த இவ்வீரரின் பின்னால் உள்ள சோகக் கதையை முழு நாவலாக எழுதலாம்.

கலாபூஷணம்
எஸ். எச். எம். இதிரீஸ்
(சி.எம்.எஸ்.ஹமீத் அவர்களின்
தந்தை, எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர்)


Add new comment

Or log in with...