ரூபாவினைப் பற்றி கலவரமடையத் தேவையில்லை | தினகரன்

ரூபாவினைப் பற்றி கலவரமடையத் தேவையில்லை

தற்போதைய அரசியல் நிலவரங்கள், அரசாங்கத்தின் நகர அபிவிருத்தி, பொருளாதார செயற்பாடுகள் போன்ற விடயங்கள் தொடர்பில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுடன் மேற்கொண்ட நேர்காணல்.

கேள்வி: - அதிக நிதியினைச் செலவிடக்கூடிய பல வேலைத்திட்டங்கள் உங்களது அமைச்சின் கீழ் உள்ளது. இந்த வேலைத்திட்டங்களின் செயற்திறன் கீழ் மட்டத்தில் உள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றதே?

பதில்: - இந்த வேலைத்திட்டங்கள் அரசாங்கத்தின் புதிய கொள்முதல் செயற்பாட்டின் கீழேயே நடைமுறைப்படுத்தப்படுகின்றது. எனினும் நாம் ஆரம்பித்துள்ள வேலைகள் செயற்திறனுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கேள்வி:- அவ்வாறு செயற்திறனாக அமைந்த வேலைத்திட்டங்கள் எவை?

பதில்:- - ஆழமான பிரச்சினையாக அமைந்த, சவால்கள் விடுக்கப்பட்ட போட்சிட்டி (துறைமுக நகர்) வேலைத்திட்டத்தை நாம் கடந்த செப்டெம்பர் மாதத்தில் சரியான முறையில் ஆரம்பித்தோம். இதற்கு கடற்றொழில், சுற்றாடல் எதிர்ப்புக்கள் அதிகளவில் எழுந்தன. இன்றும் எதிர்ப்புக்கள் உள்ளன.

நாம் அவற்றை ஒதுக்கிவிட்டு வேலைத்திட்டத்தை முன்னெடுத்துக் கொண்டு செல்கின்றோம். ஹோமாகம முதல் கடுவளை வரையில் தொழில்நுட்ப நகருக்கான 16 நிறுவனங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கட்டுநாயக்கா அதிவேகப் பாதைக்கு அருகில் சேவை நகரம், பேர குளத்தைச் சுற்றி அபிவிருத்த என மேற்கொள்ளப்படுகின்றன. ஏழை எளிய குடிசை வாழ் மக்களுக்கு வீட்டுத் தொகுதி அமைக்கும் திட்டத்தின் கீழ் 6000 வீடுகளை வழங்கியிருக்கின்றோம். எம்மிடம் செயற்திறன் இல்லை எனக் கூறுவது நாம் தாளமடிக்காத காரணத்தினாலாகும்.

கேள்வி: - உங்களது கண்காணிப்பு உயர்ந்தளவில் இருந்தாலும் சில வேலைத்திட்டங்களின் அதிகாரவாதங்கள் காரணமாக திறமையின்னை காணப்படுகின்றதுதானே?

பதில்: - இது ஒரு புதிய அமைச்சு. நாம் புதிதாக வேலைத்திட்டங்களைத் தேடிக் கொள்ள வேண்டும். புதிய வேலைத்திட்டங்களுக்கு சாத்தியக்கூற்று ஆய்வுகள் தேவையாகும். முதலீட்டாளர்களைத் தேட வேண்டும். அரசாங்கத்தின் கடன் சுமை மிக அதிகமாகும். எனவே அரசாங்க நிதிகளைப் பயன்படுத்த முடியாது. எம்மால் தனியார் துறையினரின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

கேள்வி: - உங்களது அமைச்சினால் நாட்டின் அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பை வழங்க வேண்டியுள்ளது. இந்த நோக்கினை வெற்றி கொள்ள முடியுமா?

பதில்: - கடந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி வீதம் 2 வீதமாகும். தற்போது அது 4 வீதமானது எம்மாலேயாகும். 2016ம் ஆண்டின் இறுதி ஆறு மாதத்தில் 275 பில்லியன் பெறுமதியான 96 வேலைத்திட்டங்களை நாம் அங்கீகரித்து வெளிப்படுத்தினோம். அரசாங்கம் இன்று இந்த பொருளாதார தாவலை அடைந்து கொண்டது இதலிருந்தேயாகும்.

கேள்வி: - அரசாங்கம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்பில் நம்பிக்கை வைத்திருந்தாலும் அதில் பலனில்லை என்றா நீங்கள் கூறுகின்றீர்கள்?

பதில்: - ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன திறந்து விட்ட பொருளாதாரத்தினால்தான் இந்நாட்டிற்கு இன்று முதலீட்டாளர்கள் வருகின்றார்கள் என்று எமது அரசாங்கத்தின் சிலர் நினைக்கின்றார்கள். அவ்வாறு வருவதில்லை. அவர்களுக்கு இங்கு இலாப முறைகள் இருக்க வேண்டும். எனினும் இங்கு இலாப முறைகள் இல்லை.

என்றாலும் பங்களாதேஷ், வியட்னாம், காம்போடியா, மியன்மார் போன்ற நாடுகளின் இலாப முறைகள் உள்ளன. இலாப பலசக்தி, சுற்றாடல் சட்டங்கள், உழைப்புச் சட்டங்கள் இங்கில்லை. இங்கு முதலீட்டாளர்கள் வருவதற்கான காரணங்கள் எதுவும் எனக்குத் தெரியவில்லை. தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளது என்பதற்காக முதலீட்டாளர்கள் வருவதில்லை.

கேள்வி: - அவ்வாறாயின் பொருளாதாரத்தை விருத்தி செய்வதற்கு உங்களது ஆலோசனைகள் என்ன?

பதில் - இந்த அரசியலுக்கு தேசிய ஹெல உருமய பங்களிப்புச் செய்த பிரதான விடயம் புதிய உருவாக்கங்களை மையப்படுத்திய உத்திகளாகும். அங்குதான் எம்மால் முதலீட்டு வாய்ப்பை பெற்றுக் கொள்ள முடியும். நாம் தொழில்நுட்ப நகரை ஏற்படுத்தியது ; இந்த நோக்கிலேயேயாகும். எனினும் இவற்றிலிருந்து பலனைப் பெற்றுக் கொள்ள சிறிது காலம் செல்லலாம்.

கேள்வி: - கோத்தாபய ராஜபக்ஷவின் காலத்தில் குறைந்தது நகரம் சுத்தமாகவாவது இருந்தது. தற்போது எந்த பராமரிப்பும் மேற்கொள்ளப்படுவதில்லை எனக் கூறப்படுகின்றதே?

பதில்: - இவை பரப்பப்படும் செய்திகள். சந்திரிக்கா அம்மையாரின் அரசாங்கம் வந்ததுதம் மக்கள் என்ன கூறினார்கள். எங்கே...சிரிசேன குரே இருந்த காலத்தில் என்றால் கொழும்பு அழகாக இருந்தது. பிரேமதாச அவர்களின் காலத்தில் வீடுகள் கட்டப்பட்டது. இப்போது வீடுகள் கட்டப்படுவதில்லை என்றெல்லாம் கூறப்பட்டது. இவை வெற்றுப் பேச்சுக்கள் மாத்திரமே.

கேள்வி: - கோத்தாபயவின் காலத்தில் மக்களுக்கு விளங்கக் கூடிய வேலைகள் இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றதே?

பதில் -: அன்று திறைசேரியில் வரையறையற்ற நிதி ஒதுக்கீடுகள் அவருக்கு இருந்தது. அரச வருமானத்தில் 97 வீதம் மூன்று ராஜபக்ஷக்களுக்கே சென்றது. அவரது உதவிக்கு ; பாதுகாப்பு தரப்பில் பத்து பதினைந்தாயிரம் பேர் இருந்தார்கள். அக்காலத்தில் 215 மில்லியன் டொலர் உலக வங்கி வேலைத்திட்டம் இலங்கைக்கு கிடைத்தது. அந்த வேலைத்திட்டம் இன்றும் நடைமுறையில் உள்ளது. தற்போது அந்த வேலைத்திட்டம் வெள்ளக் கட்டுப்பாட்டுக்காகவே முன்னெடுக்கப்படுகின்றது. எனினும் அந்த வேலைத்திட்டத்தின் கீழ் இன்றும் வீதிகள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன.

கேள்வி :- அன்றை வேலைத்திட்டங்கள் மக்களுக்கு விளங்கும் படியும், இன்று மக்களுக்கு விளங்காதவாறும இருப்பதற்கு காரணங்கள் உள்ளனவா?

பதில் - கூறப்படும் நகரை அழகு படுத்தலில் முக்கியமான இரண்டு பிரச்சினைகள் இருந்தன. வீதிகளை அழகு படுத்திய போதும் சமையலறையை, மலசலகூடங்களை அழகு படுத்தவில்லை. இதனால் மீதொட்டுமுல்லை கரதியானை குப்பை மேடுகள் உருவானது. அடுத்த விடயம் இதன் பின்னால் இருந்த வரையறையற்ற நிதி மோசடி. பாராளுமன்றத்திற்கு நுழையும் இடத்திலிருக்கும் பாலம் நல்லது.

அழகானது. ஆறு வீதிகளின் பாலம். எனினும் அதற்கு கிடைத்துள்ள பொறியியலாளர் எஸ்டிமேட்டைப் போன்று நான்கு மடங்கு செலவிடப்பட்டுள்ளது. கோத்தாபய அவர்கள் அழகுபடுத்திய கோட்டை தொகுதியின் தேர்தல் முடிவு என்ன? பெஷில் ராஜபக்ஷ அவர்கள் எல்லா வீதிகளையும் காபட் போட்டு அழகு படுத்திய கம்பஹாவின் தேர்தல் முடிவு எப்படியானது? அவர்கள் இந்த இடங்களில் படு தோல்வியடைந்தார்கள். படித்த அறிவுள்ள மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் இந்த அழகுபடுத்தலுக்கு பின்னால் பாரிய நிதி மோசடிகள் உள்ளது என்பதை.

கேள்வி:- - ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு குத்தகைக்கு வழங்குவது பற்றி என்ன கூறுகின்றீர்கள்?

பதில் -:- ஒவ்வொரு மனிதரும் இந்த துறைமுகத்தினால் 1800 ரூபாய் கடனாளியாகி இருக்கின்றோம். இந்த துறைமுகத்தை செயற்படுத்திச் செல்வதற்கு துறைமுக அதிகார சபைக்கு 600, 700 டொலர் மில்லியனை போட வேண்டியுள்ளது. அந்த பிரதேசம் இதனை விட அபிவிருத்தியடைய வேண்டும்.

இவை எதனையும் எம்மால் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே இதற்கு மூலோபமயமான ஒத்துழைப்பாளர் தேவை. இந்த துறைமுகத்தின் கொங்கிரீட், இரும்புகளின் பெறுமதியல்ல துறைமுகத்தின் பெறுமதி என்பது. இந்த கொடுக்கல் வாங்களில் துறைமுகம் உருவாக்கப்பட்ட விதம் சரியானதா என்ற கேள்வி உள்ளது. சட்டப் பிரச்சினைகள் அதே போன்று இவர்கள் இல்லாமல் வேறு தரப்பினர் இருக்கவில்லையா போன்ற பிரச்சினைகள் உள்ளன.

கேள்வி :- - ஹம்பாந்தோட்டை துறைமுக உப குழுவழுவிலிருந்து நீங்கள் ஏன் நீங்கிக் கொண்டீர்கள்?

பதில் -:- அனுசரணையாளர் ஒப்பந்தத்தை உருவாக்கும் குழுவில் இருந்தது சரத் அமுனுகம, சாகல ரத்நாயக்கா, மலிக் சமரவிக்ரம போன்றோரேயாகும். நான் அதில் இருக்கவில்லை. ஒப்பந்தத்தை தயாரித்து நடைமுறைப்படுத்த வேண்டியது அற்கு பொறுப்பானவர்களேயாகும். முதலீட்டு ஊக்குவிப்பு, நிதி அமைச்சர் போன்றவர்களே அதற்குத் தேவை. நான் அதற்குத் தேவையில்லை.

கேள்வி - :- அரச வளங்களை விற்பனை செய்வது இந்த அரசாங்கத்தின் நடைமுறையாகியுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகின்றதே?

பதில் -:- சில அரச வளங்கள் அரசாங்கத்தினால் முறையான முகாமைத்துவத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும். சிலவற்றை தனியார் துறையுடன் இணைந்து முகாமைத்துவம் செய்வதில் பிரச்சினைகள் தோன்றவில்;லை. டெலிகொம் விடயம் வெற்றியளித்துள்ளது.

சத்தோச தோல்வியடைந்துள்ளது. மின்சாரம், எரிபொருள், புகையிரதம், துறைமுகம், விமான சேவைகள் போன்றன அரச நிறுவனங்கள். இவற்றில் செயற்திறன் இருக்க வேண்டும். இதில் ஒன்றிலாவது நஷ்டம் ஏற்பட்டால் அது தேசிய பொருளாதாரத்தில் தாக்கத்தைச் செலுத்தும். எமது விமான சேவை கடந்த வருடத்தில் 22 ஆயிரம் மில்லியன் நஷ்டமடைந்தது. இது இந்நாட்டு மக்களுக்கு உண்ணக் கொடுத்ததாலா? இல்லை மின்சாரத்தை வழங்கியதாலா? இல்லையென்றால் ஏன் இந்த நஷ்டம் ஏற்பட்டது?

கேள்வி - :- இவை தனியார்மயமாகும் போது நாட்டின் அடையாளம் மோசமான பாதிப்புக்கு உள்ளாகும்தானே?

பதில் :- - இல்லை. அவ்வாறான பிரச்சினை ஏற்படப் போவதில்லை. இந்த விமான சேவையினை அரசாங்கத்தினால் நடாத்திச் செய்ய முடியாது. எயார் இந்தியாவைக் கூட நடாத்திச் செல்ல முடியாது போனது. பிரிட்டிஸ் எயார்வே இப்போது எங்கே.....?

கேள்வி -:- நீங்கள் கூறுவது ஹெல உருமயவின் கருத்துக்களையா அல்லது வேறு எவருடையதாவது கருத்துக்களா?

பதில்:- - தேசிய ஹெல உருமய எமது நடைமுறைச் செயற்பாடு.நாம் மஹிந்த அவர்களுக்கு ஐந்து சக்தியினை மையப்படுத்திய வேலைத்திட்டத்தை சமர்ப்பித்தோம். அவர் அதனை ஏற்றுக் கொண்டார்.

ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு புதிய உருவாக்க வேலைத்திட்டத்தை சமர்ப்பித்தோம். அவரும் அதனை ஏற்றுக் கொண்டார். நாம் பணியாற்றுவது விரிவான கண்ணோட்டத்துடனாகும்.

கேள்வி -:- வீழ்ச்சியின் ஆரம்பம் அரசாங்கத்திற்கு சவாலாலாக அமையுமா?

பதில் -:- அரசாங்கத்திற்கு சில அழுத்தங்கள் இருக்கும். அது அதிகமாக பாதிப்பை ஏற்படுத்துவது ஸ்ரீ.ல.சு.கட்சிக்கேயாகும். மைத்திரிபால சிரிசேனா அவர்களை அரசியல் ரீதியில் கட்சியினுள் பலவீனப்படுத்துவதே இந்நேரத்தில் அவர்களது நோக்கம்.

கேள்வி -:- அரசாங்கம் பெடரல் அரசியலமைப்பொன்றை கொண்டு வர முயல்வதாக தினேஷ் குணவர்தன கூறுகின்றாரே?

பதில்:- - தினேஷ் குணவர்தன அந்த அரசியலமைப்பை உருவாக்கும் குழுவில் இருக்கார்தானே. அவர் அதனை நன்கு அறிவார்.

கேள்வி -:- இந்த அரசாங்கத்தின் கீழ் தொடர்ச்சியாக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து செல்வது நல்ல நிலை இல்லை தானே?

பதில் -:- அது தொடர்பில் தேவைக்கதிகமாக குழப்பமடையத் தேவையில்லை. சில நாடுகள் ஏற்றுமதிக்கு சிறந்த விலையினைப் பெற்றுக் கொள்ள இவ்வாறான வேலைகளைச் செய்கின்றன. சமச்சீராக இருந்தால்தான் நல்லது.

கேள்வி:- அத்துரலியே ரத்ன தேரருக்கு ஹெல உருமயவை விட்டுச் செல்வதற்கு ஏதுவாக அமைந்த காரணங்கள் என்ன?

பதில்:- - அது அவரது உரிமை. இதற்கு முன்னரும் தேரர்கள் கட்சியிலிருந்து சென்றிருக்கின்றார்கள். அது கட்சிக்கு எந்தப் பாதிப்புமில்லை. கட்சி என்பது ஒரு அமைப்பு. அமைப்பில் ஒழுங்கின் கீழ் இருக்க வேண்டும். அவருக்கு வாக்களித்தது ஐ.தே.கட்சியினர். இடையில் சென்று நான் சுயாதீனமாகச் செயற்படுகின்றேன் என கூற முடியாது. அவ்வாறாயின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மீள வழங்கிவிட்டே சுயாதீனமாக செயற்பட வேண்டும்.

கேள்வி -:- மக்கள் மீது தொடர்ந்து வரிச்சுமைகளைச் சுமத்துவது தொடர்பில் என்ன கூறுகின்றீர்கள்?

பதில்:- - அரச வருமானம் சரிவடைந்ததால்தான் அவ்வாறு இடம்பெற்றது. இது கவலைக்குரிய நிலையே. வரியினை அதிகரிக்காவிட்டால் அரசாங்கம் மோசமாக பாதிப்படையும்.

கேள்வி:- - அவ்வாறிருந்தாலும் அமைச்சர்களின் செலவுகள் தேவையினை விடவும் அதிகம்தானே? புதிதாக வாகனங்களும் கொண்டு வரப்படுகின்றது?

பதில்:- - இது அதிகமானவர்கள் பிரபலமடைவதற்காகக் கூறும் விடயங்கள். நான் எனில் வாகனம் எடுக்கவில்லை. அமைச்சர்களுக்கு வாகனம் தேவைதானே. வாகனம் தேவையானோருக்கு அதனை வழங்கத்தான் வேண்டும்.

 

துமிந்த சம்பத்...
தமிழில்: -
எம். எஸ். முஸப்பிர்
(புத்தளம் விஷேட நிருபர்)


Add new comment

Or log in with...