பிக்கு மாணவர்களை அகற்ற கண்ணீர்ப்புகை தாக்குதல் (UPDATE) | தினகரன்

பிக்கு மாணவர்களை அகற்ற கண்ணீர்ப்புகை தாக்குதல் (UPDATE)

வைப்பக படம்
 
நீதிமன்ற உத்தரவை மீறி, ஜனாதிபதி அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்குள் நுழைந்த, அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் பேரணியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்கும் வகையில், பொலிசார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
 
குறித்த பகுதியில் ஏற்பட்டுள்ள வாகன நெரிசல் காரணமாக, லேக் ஹவுஸ் சுற்றுவட்டம் முதல், கொழும்பின் புறக்கோட்டை பகுதியில் அதிக வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

 

பிக்கு மாணவர்கள் பேரணி; லோட்டஸ் வீதி மூடல்

 
அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் பேரணியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக காலி வீதிக்குச் செல்லும் லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது.
 
செரமிக் சந்தியிலிருந்து லோட்டஸ் வீதியின் NSA சுற்றுவட்டம் வரையான பாதையே இவ்வாறு மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இதன் காரணமாக, குறித்த வீதியைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள், மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிசார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.
 
பல்கலைக்கழகத்திற்கு அதிகளவான மாணவர்களை இணைத்துக்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

Or log in with...