பஷீர் சேகுதாவூத்திடம் CID யினர் 3 மணிநேர விசாரணை | தினகரன்

பஷீர் சேகுதாவூத்திடம் CID யினர் 3 மணிநேர விசாரணை

 
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்திடம் பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினர் மூன்று மணிநேரம் விசாரணைசெய்துள்ளனர்.
 
தாருஸ்ஸலாம்  மறைக்கப்பட்ட உண்மைகள்  எனும்  முகவரியற்ற புத்தகமொன்றை,  தனிநப ஒருவருக்கு சேறு பூசும் வித்த்தில்  வெளியிட்டமை தொடர்பில் பஷீர் சேகுதாவூத்திடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
 
தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட உண்மைகள் எனும்  நூலுக்கு எதிராக  ஶ்ரீலங்கா  முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்  பிரதித்தலைவரும்  முதலமைச்சருமான  ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.  சல்மான் ஆகியோர் கொழும்பு  குற்றப்புலனாய்வுப் பிரிவில்  மேற்கொள்ளப்பட்டிருந்த முறைப்பாடு தொடர்பில் மேறகொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாகவே பஷீர் சேகுதாவூத்திடம்  வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இதற்கு முன்  இரண்டு தடவைகள் கொழும்பு  குற்றத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்காக  அழைக்கப்பட்டிருந்த போதும்  சமூகமளிக்காத  நிலையில்  குற்றத்  தடுப்புப் பிரிவின் கடுமையான  எச்சரிக்கையின் பின்னர்  நேற்று (28)  பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவில்  ஆஜரானார்.
 
குறித்த விடயம் தொடர்பில், மற்றுமொரு தினத்தில் வாக்குமூலம் வழங்குவதற்காக பஷீர்சேகுதாவூத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்
 
இது குறித்த  விசாரணைகள்  பின்னர் வெளியே  வந்த பஷீர்சேகுதாவூத்திடம்  ஊடகவியலாளர்கள்கேள்விகளை   தொடுக்க முற்பட்ட போதும்  அவர் ஊடகங்களுக்கு எவ்வித கருத்தினையும் வெளியிடாது சென்றமை குறிப்பிடதக்கது.
 
 
 

Add new comment

Or log in with...