Wednesday, March 29, 2017 - 8:03am
ஊடகவியலாளர் கீத் நொயாரை கடத்துவதற்காக பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வேன் ஒன்றை கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.ஷ
பிலியந்தலையிலுள்ள பெண் ஒருவரின் பாதுகாப்பில் இருந்துள்ள நிலையில் குறித்த வேன் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ மேஜர் புளத்வத்தவுடன் தொடர்புடைய பெண் ஒருவரின் வீட்டிலேயே குறித்த வாகனம் கைப்பற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த வாகனம், ஊடகவியலாளர் கீத் நொயாரின் கடத்தல் மாத்திரமன்றி, ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடையது என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
கீத் நொயார், கடந்த 2008, மே மாதம் கொழும்பில் வைத்து தாக்குதலுக்கு இலக்கானார் என்பதோடு, லசந்த விக்ரமதுங்க கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment