பிரயாகா மீது தாக்குதல் | தினகரன்

பிரயாகா மீது தாக்குதல்

மிஷ்கின் இயக்கிய பிசாசு படத்தில் நடித்தவர் பிரயாகா மார்ட்டின். மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். குஞ்சு முகமுது இயக்கும் விஸ்வாஸபூர்வம் மன்சூர் படத்தில் ரோஷன் மேத்யூ ஜோடியாக நடிக்கிறார்.

அப்போது மேக்அப் போடுமாறு பிரயாகா மேக்அப் மேனை கூறியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஷூட்டிங் முடிந்ததும் மேக்அப் மேனிடம் பிரயாகாவின் அம்மா இது பற்றி கேட்டுள்ளார்.

அப்போது பிரயாகா கையை நீட்டி பேசியபோது அவரது கையை மடக்கி மேக்அப் மேன் தாக்கினாராம். ஆனால் பேஸ்புக்கில் பிரயாகா தன்னை தாக்கியதாக அவர் பதிவிட்டாராம்.

இது குறித்து பிரயாகா கூறும்போது, ‘என்னை தாக்கி தரக்குறைவாக மேக்அப் மேன் திட்டினார். பேஸ்புக்கில் என் மீது அவதூறு பரப்புகிறார். படத்தின் ஆர்ட் டைரக்டரும் அவருடன் சேர்ந்துள்ளார். இருவரை பற்றியும் பொலிசில் புகார் அளிப்பேன்’ என்றார். 


Add new comment

Or log in with...